கொரானா காலத்திலும் பலரின் நுரையீரலை பலமாக்கிய உணவுகள் இவைதான்

 
lungs

கொரானா வைரஸ் பொதுவாக நம் நுரையீரலை தாக்குகிறது .அங்கு குடியேறும் வைரஸ் நுரையீரலை பாதித்து பின்னர் இதயத்தினை பாதித்து இறுதியில் நம் உயிரை போக்கும் .அதனால் அந்த நோய் தொற்று காலத்தில் பலரும் தங்களின் நுரையீரலை பலப்படுத்தும் உணவுகளை சாப்பிட்டு வந்தனர் .இன்னும் பலர் பல ஹோமியோபதி ,மற்றும் ஆயுர் வேத மருந்துகள் மூலம் தங்களின் நுரையீரலை பலப்படுத்தி வந்தனர்

கொரோனா வைரஸ்   நோய்த் தொற்றில் இருந்து மக்கள் தங்களைப் பார்த்துக் கொள்ள அதிக அளவில் இஞ்சியை வாங்கி பயன்படுத்தினார்கள்  . இருமல் மற்றும் சளியை குணப்படுத்த பொதுவாக பயன்படுத்தப்படும் வீட்டு வைத்தியங்களில் இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியை தருவதிலும் முதன்மையாக உள்ளது.

கிரீன் டீ.

green tea health tips

 கிரீன் டீயில் உள்ள கனிமங்கள் நுரையீரல் பிரச்சனையை சிறந்த முறையில் குணப்படுத்துகிறது காலை மற்றும் மாலை இரண்டு வேலைகளில்  கிரீன் டீயை எடுத்துக் கொண்டால் நுரையீரல் பலமாயிருக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்

பூண்டு.

கொரானா காலத்திற்கு  பூண்டு ஒரு வரப்பிரசாதமாகும். இது நெரிசல் மற்றும் மூச்சுத் திணறலை போக்க மேலும் வீக்கம் மற்றும் நுரையீரல் புற்று நோய் அபாயத்தையும் ,வைரஸ் தொற்றையும்  குறைக்க உதவுகிறது.

மஞ்சள்.

மஞ்சளில் உள்ள கலவை இயற்கையாகவே நுரையீரலை சுத்தப்படுத்துகிறது. சுவாச நோய்களால் ஏற்படும் வீக்கம் மற்றும் நெரிசலை இது குறைத்து நம் நுரையீரலை பலப்படுத்துகிறது

தேன்.

சுத்தமான தேன் உடலிலுள்ள அனைத்து நோய்களையும் எளிதாக குணப்படுத்தி விடும். மேலும் தேனில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சுவாசப் பாதையைச் சுத்தப்படுத்தி நமது நுரையீரலுக்கு வலு சேர்க்கிறது .