நுரையீரலை நாம் பாதுகாக்க இந்த வகை உணவுகள் உதவும்

 
Lung

பொதுவாக நாம் உயிர்வாழ இதயம் போலவே மிக முக்கியமான உறுப்பு நுரையீரல் ஆகும் .இந்த நுரையீரலை நாம் பாதுகாக்க சில வகை உணவுகள் உதவும் 
நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்க நாம் தினமும் உட்கொள்ள வேண்டிய உணவுகளை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
1.மஞ்சளில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் ,நுரையீரலில் ஏற்படும் வீக்கம், சளி மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்க்கு ஒரு தீர்வாக அமையும்.
2.ஆப்பிள் உட்கொள்வது ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்றுநோயின் ஆபத்தை குறைக்க உதவுகின்றது.
3. மிளகு தூளை தினமும் சாப்பிட்டு வருதால் நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்.
4. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக கீரையில் காணப்படுவதால் புற்றுநோயால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும்.
5.தக்காளி அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடுவது ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்களுக்கு தீர்வாக அமையும். 
6.முட்டை கோஸ் போன்ற நார்சத்து அதிகமாக உள்ள உணவை எடுத்துக்கொள்பவர்களுக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்படாது என்று ஆய்வு கூறுகின்றது.
7. பருப்பை சாப்பிடுவதால் நுரையீரல் அபாயத்தில் இருந்து விடுப்படலாம்.