மீண்டும் லாக் டவுனால் மன அழுத்தம் ஏற்படாமலிருக்க உதவும் வழிகள்

 
ஸ்ட்ரெஸ்க்கு குட் பை சொல்ல ஈஸியான சில வழிகள்! #Stress

 கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து சேவைகளும் முடக்கப்பட்ட நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்பிற்குச் சென்று வருகின்றனர்.  இந்த நிலையில், மும்பை, தில்லி, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் என்னும் புதிய தொற்றின் காரணமாக மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 
இந்த நிலையில், ஒமைக்ரான் என்னும் புதிய நோய்த் தொற்றின் காரணமாக தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படுமா என்று மக்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது ஊரடங்கை கடுமையாக்கி, பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர்.

. மீண்டும் ஊரடங்கு காரணமாக உங்கள் மன அழுத்தம் குறைந்து மனம் தெளிவடைந்து சரியான முடிவுகளை எடுக்க இந்த பயிற்சி முறைகள் உங்களுக்கு உதவும்.            

lockdown                                                  

நடைப்பயிற்சி    

                

தினமும் காலையில் நடைபயிற்சி  (வாக்கிங் ) செல்லுங்கள்.

நடைப்பயிற்சி உங்கள் உடலுக்கு ஆரோக்கியதையும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தினமும் நடைப்பயிற்சி செய்து வந்தால் மனஅழுத்தம் குறையும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு நடைப்பயிற்சி செய்வதின் மூலம் வெகுவாக குறையும் உயர் ரத்த அழுத்தம் இருந்தால் சீராகும்.  

நண்பர்களோடு நடைப்பயிற்சி செய்யுங்கள் மற்றவர்களோடு நீங்கள் நடைப்பயிற்சி செய்யும் பொழுது நீங்கள் மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.

தினமும் நடைப்பயிற்சி செல்ல முடிய வில்லை கூட வாரத்தில் ஒரு மூன்று நாட்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள்.

காலையில்  நடைப்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கவில்லை என்றால் மாலையில் ஒரு முப்பது நிமிடம் நடைப்பயிற்சி செல்லுங்கள் இவை உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

மன அழுத்தம் குறைய யோகா

யோகா உலகம் முழுவதும் பின்பற்றக்கூடிய உடல் மற்றும் மனபயிற்சி முறையாகும். யோகா செய்வது மன அழுத்தத்தை குறைக்கும்.

யோகா பயிற்சி முறைகளில் நிறைய உள்ளன சிலவகை மூச்சு பயிற்சிகளும் உள்ளன. இவைகளை தகுந்த யோகா ஆசிரியரிடம் கற்று கொண்டு முறையாக பயிற்சி செய்வது நல்ல பலனை தரும்.

யோகா (தியானம்) செய்வதால் மனம் லேசானது போல் உணருவீர்கள்.  இந்த பயிற்சிகள் செய்வதின் மூலம் மனம் ஒரு தெளிவான நிலையை அடையும். சரியாக சிந்தித்து செயல் பட கூடிய ஆற்றலை தரும்.

உங்களுக்கு பிடித்த வேலையை செய்யுங்கள்      

ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வேலை செய்ய மிகவும் பிடிக்கும் சிலருக்கு தோட்ட வேலை செய்வது பிடிக்கும் செடிகள் வளர்ப்பது அதனை பராமரிப்பது மிகவும் பிடிக்கும் அந்த வேலையை அவர்கள் செய்யலாம். வீட்டில் குழந்தைகளிடம் விளையாடலாம். நல்ல புத்தங்கங்கள் படிக்கலாம்.  

உங்களுக்கு பிடித்த காமெடி  வீடியோ மற்றும் திரைப்படங்களை பார்க்கலாம். இவை எல்லாம் உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.

தூக்கம் மிகவும் அவசியம்

நாம் உடலும் மனதும் ஓய்வு எடுப்பது தூங்கும் நேரத்தில் தான் . நாம் சொல்வதை எல்லாம் செய்யும் நம் உடலுக்கு ஓய்வு கொடுப்பது மிகவும் அவசியம்.

 தூக்கம் ஒன்றே நமது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளித்து அடுத்த வேலையை செய்ய நாம் உடலையும் மனதையும் தயார்படுத்தும், எனவே சரியான நேரத்திற்கு தூங்க செல்லுங்கள்.

இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பது நல்லது அல்ல குறைந்தது ஏழு மணி நேரமாவது  தூங்குவது அவசியம். முடிந்த வரை விரைவாக தூங்க செல்லுங்கள்.

இசை

இசை கேட்பது மன அழுத்ததை குறைக்கும். உங்கள் மனம் இருக்கமாக தோன்றும் நேரத்தில் நல்ல மென்மையான இசையை கேளுங்கள் அது பாடல்கள் அல்லது இசையாகவும் இருக்கலாம். இசை கேட்பதால்  உங்கள் மன இறுக்கம் தளர்ந்து மனம் லேசாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புகை மற்றும் மது பழக்கம்

மன அழுத்தம் குறைய சிலர் மது மற்றும் புகை பழக்கத்தை சிலர் நாடுவார்கள் இது மிகவும் தவறானது இது ஒரு தற்காலிக நிவாரணமாக தோன்றினாலும் இது என்றுமே ஒரு நிரந்தர தீர்வாக அமையாது,

ஒரு கட்டத்தில் மது மற்றும் புகை பழக்கம் இல்லாமல் தூக்கம் வராது என்ற நிலை ஏற்படும். இதுவே உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் எனவே மது மற்றும் புகைப்பழக்கதை தவிருங்கள்.                                         

மன அழுத்தம் குறைய உணவு                                                              

சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள் நேரம் கடந்து சாப்பிடுவது மற்றும் நீண்ட நேரம் பசியோடு இருப்பது போன்றவைகளை தவிருங்கள்.

ஆரோக்கியமான உணவுகளை  சாப்பிடுங்கள்

 காய்கறிகள்,  கீரைகள்  ,பழங்கள், போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து கொள்ளுங்கள் உணவில் எண்ணை மற்றும் காரம் அதிகம் சேர்க்காதீர்கள்.       

காபி மற்றும் டீ போன்ற பானங்களை கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள். டார்க் சாக்லேட் சாப்பிடலாம்.அது மனஅழுத்தத்தை குறைக்க கூடியது.

தன்னம்பிக்கை                                       

எப்போதும் தன்னம்பிக்கையோடு இருங்கள் என்னால் இந்த செயலை செய்ய முடியும் என்று நம்புங்கள் உங்கள் பிரச்சனையை அடுத்தவர் மீது திணிக்க முயற்சி செய்யாதீர்கள் யாரையும் எதற்காகவும் கட்டாய படுத்தாதீர்கள்.மன உளைச்சல் இன்றி மகிழ்ச்சியோடு இருங்கள்.