டாஸ்மாக் பிரியர்களின் கல்லீரலை காப்பாற்றும் வழிகள்

 
Liver

இப்போதெல்லாம் கல்யாண வீடு முதல் கருமாதி வீடு வரை மது அருந்தும் கலாச்சாரம் பெருகிவிட்டது .விளையாட்டாக இந்த மது பழக்கம் தொடங்கி நாளடைவில் பலர் அதற்கு அடிமையாகி விடுவதால் பல குடும்பங்கள் சீரழிவதை நாம் கண் கூடாக பார்க்கிறோம்

மதுவுக்கு அடிமையானவர்கள் அதை அவ்ளோ சீக்கிரம் நிறுத்த முடியாது .அதற்கு கடுமையான மன உறுதி வேண்டும் .பல மது பிரியர்கள் அதை நிறுத்த போராடி வருகின்றனர் .இதனால் கல்லீரல் முதல் சிறுநீரகம் வரை பாதிக்கும் .எனவே கல்லீரல் பாதிப்பு பற்றி தெரிந்து கொண்டு மது பிரியர்கள் அதை நிறுத்த முயற்சி செய்யுங்கள்

liquor

1.பல டாஸ்மாக் பிரியர்கள்  முற்றிலுமாக தங்களது கல்லீரல் செயலிழந்த பிறகுதான் மருத்துவமனைக்கு வருகிறார்கள் அதுபோன்ற சூழ்நிலையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே வழி.அதற்கு செலவாகும்  பல லட்சங்களை பற்றி தெரிந்தால் மதுவை தொடவே மாட்டிர்கள்

2.மதுவினால் உண்டாகும் கல்லீரல் சிரோசிஸ் என்று சொல்லப்படும் நோய், நீண்ட காலமாக மதுவால் உங்கள் கல்லீரல் சேதம் அடைந்து வருவதால் உங்கள் கல்லீரலை கடினமாக மாற்றி செயல்பட முடியாமல் செய்து செயலிழக்க செய்துவிடும்..அதனால் லிவரை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்

3.மதுவின்றி கல்லீரலை  பாதுகாக்கும் வழி

கல்லீரலை  பாதுகாக்க உங்களுடைய வயது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரித்தல்

கல்லீரலை  பாதுகாக்க அதிக சோடியம் நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கல்லீரலை  பாதுகாக்க முறையான மருத்துவ சிகிச்சைகளை சரியான நேரத்தில் மேற்கொள்ள வேண்டும்.

கல்லீரலை  பாதுகாக்க முக்கியமாக மது பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்

4.வயிற்றில் நீர்கோர்த்தல் ஏற்படும்

 அதிகப்படியான சோடியம் நிறைந்த உணவுகளை கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கும் காலங்களில் நீங்கள் எடுத்துக் கொள்வதால் அடிவயிற்றில் நீர் கோர்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும்..

5.மூளை பாதிக்கப் படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

இதற்கு உங்களுடைய உணவில் மாற்றம் செய்ய வேண்டும் மற்றும் உடற்பயிற்சி, யோகா, போன்ற நல்ல பழக்கத்தினை கற்று கொண்டு மது பழக்கத்தை கை விட வேண்டும்