ஈரலை பாதுகாக்க ஈஸியான வழிகள்

 
Liver

பொதுவாக, மது அருந்துதல் ஈரலுக்கு மிகவும் தீங்கை விளைவிக்கக்கூடியது என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோம்.

 கல்லீரலை பாதுகாக்க நினைப்பவர்கள்  ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ் சாப்பிட கூடாது . இப்போது அனைவரும் விரும்பி சாப்பிடும் நொறுக்குத் தீனிகளில் ஒன்று ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ் ஆகும். ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ் கலோரிகள் அதிகமானது மட்டுமல்ல;இது ஈரலில் கொழுப்பின் அளவை அதிகரிப்பதோடு, இன்சுலினை ஏற்றுக்கொள்ளாத தன்மையையும் உடலில் உருவாக்கி உடலுக்கு கேடு உண்டாக்கும் .

liver

கல்லீரலை பாதுகாக்க நினைப்பவர்கள்  ஒயிட் பிரட் சாப்பிட கூடாது .ஒயிட் பிரட் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைடிரேடு அடங்கியது. இதில் நார்ச்சத்து கிடையாது. ஆகவே, ஒயிட் பிரட் சாப்பிட்டதும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உடனடியாக அதிகரிக்கும். ஆகவே ஒயிட் பிரட்டை ஈரலை பாதுகாக்க விட்டு விடவேண்டும்

கல்லீரலை பாதுகாக்க நினைப்பவர்கள்  தாவர எண்ணெய் உபயோகத்தில் கவனம் வேண்டும்  (வெஜிடபிள் ஆயில்) தாவர எண்ணெயில் ஒமேகா 6 கொழுப்பு உள்ளது. இந்த எண்ணெய்யைக் கொண்டு சமைக்கும்போது ஒமேகா 6 விரைவில் ஆக்ஸிஜனேற்றம் அடைவதால் இது ஈரலுக்கு பெரும் கேடு உண்டாக்கும்

கல்லீரலை பாதுகாக்க நினைப்பவர்கள்  பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் குறைத்து கொள்ள வேண்டும்