இந்த அறிகுறியிருந்தா ,உங்க கல்லீரல் ஆபத்துல இருக்குன்னு அர்த்தம்

 
Liver

 

பொதுவாக நம் உடலில் இதயத்துக்கு இணையான உறுப்புக்களில் மிக முக்கியமானது சிறுநீரகம் ,நுரையீரல் மற்றும் கல்லீரல் .இந்த உறுப்புகளில் நாம் உயிர் வாழ அவசியம் கல்லீரல் .இது நாம் உண்ணும் உணவினை செரிமானம் செய்ய தேவையானது .இந்த கல்லீரலை பலர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி கெடுத்து கொள்கின்றனர் .இந்த கல்லீரல் கெட்டு விட்டால் நம் உடலில் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் .

liver

1.அடிக்கடி குமட்டல் அல்லது வாந்தியெடுத்தல் கல்லீரல் கெட்டு போனதற்கான  ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும்.

2.இந்த லிவர் கெட்டு விட்டால் பசியின்மை மற்றும் செரிமான பிரச்சனைகளுடன் எடை குறைவதற்கு வழிவகுக்கும்.

3.. அடுத்து கால்கலில்  வீக்கம் உண்டானால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கும் 

4.உங்கள் சிறுநீர் தொடர்ந்து இருண்ட நிறத்தில் இருந்தால், ,  இது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்

5.கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகளில் ஒன்று சோர்வு .அடிக்கடி சோர்வு உண்டானால் கவனிக்க வேண்டும் 

6.கல்லீரலில் கொழுப்பு சேர்ந்தால், உணவுப் பழக்கத்தை மேம்படுத்தி, சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம்.

7.கல்லீரல் சரியாக செயல்படாதபோது, கழிவு பொருட்கள் வெளியேற்றப்படுவதில்லை, இதன் விளைவாக, பிலிரூபின் அளவு அதிகரிக்கிறது.

8.இந்த பிலிரூபின் அளவு அதிகரித்தால், நம் உடலில் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும்,