எந்த வயதிலும் கல்லீரல் கெடாமல் காக்கும் வழிகள்

 
liver

 

பொதுவாக கொழுப்பு கல்லீரல் பிரச்சினைகள்சிலருக்கு இருக்கும் .இது  தீவிரமடையும் போது, கல்லீரல் ஈரல் அழற்சி போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். இந்த நோயின் அறிகுறிகளை பார்க்கலாம்

Liver

1.கல்லீரலில் கொழுப்பு படியத் தொடங்கும் போது, முகத்தின் வீக்கம், தடிப்புகள், முகத்தில் தோல் சிவந்து போவது, சருமத்தில் அரிப்பு ஆகியஅறிகுறிகள் தோன்றும் .

2.அடுத்து பசியின்மை, மற்றும் வாந்தி வருவது போன்ற குமட்டல் உணர்வு ஆகியவை கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகள் . .

3.அடுத்து கழுத்தின் கீழ் பகுதியில் கருமையாக இருப்பது, கால்கள் மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் நீர் தேங்குவது போன்றவையும் இந்த நோயின் அறிகுறிகளில் ஒன்றாகும்.

4.கல்லீரல் கொழுப்பு நோயால் பாதிக்கப்பட்டால், உடல் மிகவும் பலவீனமாகிவிடும். இதனுடன், எடையும் வேகமாக குறையத் தொடங்குகிறது.

கல்லீரல் நோய் ஏற்படமால் இருக்க செய்ய வேண்டியவை

1. தினமும் மது அருந்துவது ஆபத்தில் முடியும்

2. உடல் எடையை அதிகமாகாமல் கட்டுக்குள் வைத்திருக்கவும்

3. தினமும் வழக்கமான உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவது நலம் சேர்க்கும்

4. சாதத்தை குறைத்து விட்டு காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்

5. சிலரின் உடலில் இருக்கும் நீரிழிவு, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுக்குள் வைத்திருக்கவும்