பத்து ரூபாய் லெமன் டீயில் இருக்கும் பத்து நன்மைகள்

 
lemon

நம் உடலை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளவும் ,புத்துணர்வு உடனே கிடைக்கவும் ,ஆற்றலோடு இருக்கவும் நாம் லெமன் டீ ,இஞ்சி டீ மற்றும் க்ரீன் டீயை குடிக்கிறோம் .இந்த பதிவில் லெமன் டீ குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் .லெமன் டீயில் இருக்கும் சிட்ரிக் ஆசிட் நம் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி ,கல்லீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் .இது நம் உடலின் கெட்ட கொழுப்புகளை கரைத்து இதய நோய் வராமல் காக்கிறது .மேலும் சுகர் பேஷண்டுகளின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது .

leman tea

லெமன் டீயில் இருக்கும் நன்மைகள்:

சிலர் பிரியாணி போன்ற அதிக மசாலா பொருட்களை சேர்த்து உணவு வகைகளை எடுத்துக் கொண்டு வயிறு பிரச்சினையால் அவதிப்படுவர் .அப்போது வயிறு உப்புசம், வயிறு வலி போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் ஒரு கப் லெமன் டீ குடித்தால் தடை இல்லாமல் எளிதில் செரிமானம் ஆகிவிடும். செரிமான பிரச்சனைகளை தீர்க்க லெமன் டீ உதவி புரிகிறது .

சிலர் உடல் எடையை குறைக்க அரும்பாடு படுவதுண்டு .அதனால் எடையை , சீராக வைத்துக் கொள்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிகம் டென்ஷன் தரும் வேலைகளில் உள்ளவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள், ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் பெற ஒரு கப் லெமன் டீ அருந்தினால் உடனே நிவாரணம்  கிடைக்கும்.

லெமன் டீயில் நரம்பு மண்டலங்கள் சாந்தமடைய செய்யும் ஆற்றல் உள்ளது. மேலும் இது மூளை நரம்புகளையும் வலுவாக்கி, சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறது. இதனால் எப்பொழுதும் உற்சாகத்துடன் காணப்படலாம். தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் முதலில் ஒரு கப் டீ பருகினால் நாள் முழுவதும் உற்ச்சாகமாக இருப்பீர்கள்