வெண்டைக்காயை நீரில் ஊரவச்சி சாப்பிட்டா ,நம்மை எந்த நோயிலிருந்து வாழ வச்சி காக்கும் தெரியுமா ?

 
ladies finger

தினமும் ஒவ்வொரு வகையான காய்கறிகளை நாம் சாப்பிடுவதால் நன்மைகள் அதிகம். அந்த வகையில் நாம் “வெண்டைக்காய்” சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். வெண்டைக்காய் பயன்கள் மூளை மூளை சுறுசுறுப்பாக இயங்கினால் அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்ய முடியும். நமது நாட்டில் பல காலமாகவே வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும் என்கிற அடிப்படையில் இந்த காயினை அதிகம் சாப்பிட்டு வருகின்றனர். குறிப்பாக கல்வி பயிலும் குழந்தைகள் வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் மூளை செயல் திறன் அதிகரித்து கல்வியில் சிறக்க முடியும்.

vendakkai

பொதுவாக வெண்டைக்காய் நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

ஆனால் வெண்டைக்காயின் வளவளப்பு தன்மை கொண்ட காய்கறி என்ற காரணத்தால் பலர் இதனை தவிர்த்து விடுகின்றார்கள்.

உண்மையில் இதில் உடலில் தேவையான சத்துக்களும், ஆரோக்கிய நன்மைகளையும் உள்ளடக்கியது.  .

 

வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் உள்ளன.

அதிலும் வெண்டைக்காயை நீரில் ஊறவைத்து எடுத்து கொள்வது இன்னும் பல நன்மைகளை தரும். அந்தவகையில் தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

வெண்டைக்காயில் இருக்கும் கோந்து  கொலஸ்ட்ராலை கட்டுப் படுத்தி பித்த அமிலத்தால் எடுத்து செல்லப்படும் நச்சுப் பொருட்களை வடிகட்டவும் உதவுகிறது.

வெண்டைக் காயில் இருக்கும் நார் சத்துக்கள் நீரை உறிஞ்சி அதிக மலம் வெளியேற உதவுவதால் மலச் சிக்கல் தடுக்கப்படுகிறது.

வெண்டக்காய் நம் உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியா கிருமிகளையும் ஊக்குவிக்கிறது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் இரவு ஒரு இளம் வெண்டை காயை நீரில் ஊறப் போட்டு அதிகாலை எழுந்தவுடன் அந்நீரைக் குடித்துவிட்டு காயையும் மென்று தின்ன வேண்டும். தொடர்ந்து செய்தால் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும்.

அசிடிட்டி இருப்பவர்கள் தினமும் 6 வெண்டைக் காய்களை சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி குறையும்.

வெண்டக்காய் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் இரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிப்பதை தடுக்கும்.

சுவாசம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் வெண்டக்காய் ஊற வைத்த நீர அருந்துவது நல்லது.

வெண்டக்காயில் பால் சேர்த்து வேக வைத்தும் குடிக்கலாம்.

பிஞ்சு வெண்டக்காயை வேகவைத்து எடுத்த நீருடன் சர்க்கரை சேர்த்து குடித்தல் இருமல்,நீர்கடுப்பு சரியாகும்.

வெண்டக்காயை பச்சையாக மென்று சாப்பிட்டால் பற்கள் தூய்மை பெறுவதுடன் ஈறுகளில் இரத்த ஓட்டம் தூண்டப்படும்.