வெண்டைக்காய் ஜூஸ் 30 நாள் குடிச்சா எந்த நோய் குணமாகும் தெரியுமா ?
பொதுவாக வென்டைக்காயை உலகம் முழுவதும் உணவாக பயன்படுத்துவதை விட மருந்தாக பயன் படுத்துவோர்தான் அதிகம் .இதை சாப்பிட்டால் மூளை வளரும் ,சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்ற கருத்து உலகம முழுவதும் நிலவுகிறது .இது உண்மையும் கூட ,நாமும் இதன் சாறை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகளை அடையலாம் .இது வழவழவென்று இருக்கிதென்று ஒதுக்கிவிடாமல் உணவுடன் சேர்த்துக் கொள்வதின் மூலம் இது போன்ற நோய்கள் நம்மை அணுகாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.அனீமிக் உள்ளவர்கள் இந்த சாறை குடித்தால் நலம் .மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதன் சாறை வெறும் வயிற்றில் குடித்தால் சுகர் கண்ட்ரோலில் இருக்கும் .மேலும் இது ஆஸ்த்மாவை குணப்படுத்தி ,சிறந்த நோயெதிர்ப்பு சக்தி கொடுக்கும் ,மேலும் சரும ஆரோக்கியம் முதல் எலும்புகளின் ஆரோக்கியம் வரை இது பாதுகாக்கும்

நம்மூரில் வெண்டைக் காயைப் பருப்பு சாம்பாரில் அல்லது குழம்பில் போட்டு உணவுக்குப் பயன்படுத்துவர். வெண்டைக்காய் வருவல், வெண்டைக்காய் பச்சடி செய்தும் சாப்பிடுவார்கள். இதனைக் கஷாயம் செய்து குடித்தால் இரத்தக் கொதிப்பு இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும் .
சிலர் மூளை நரம்புகளில் வலி எரிச்சல் என்று கஷ்டப்படுவார்கள். இவர்கள் வெண்டைக்காய் ஜூஸ் தயாரித்து தினசரி காலை வெறும் வயிற்றில் 30 நாட்கள் சாப்பிட்டால் 31ம் நாள் இந்நோய் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போய் விடும் .
வெண்டைக்காயை உணவுடன் அடிக்கடி சேர்த்துக் கொள்வதின் மூலம் மூளைச் சூடு, உடல்சூடு ஆகியவற்றைத் தணிப்பதுடன் மலச்சிக்கலுக்கு எந்த மருந்தும் சாப்பிடாமல் இந்த வெண்டை மூலம் சரி செய்து விடலாம் .


