குங்குமப்பூவில் குவிந்து கிடக்கும் நன்மைகள்

 
ஸ்ட்ரெஸ்க்கு குட் பை சொல்ல ஈஸியான சில வழிகள்! #Stress

பொதுவாக குங்குமப்பூ ‘சிவப்பு தங்கம்' என்னும் பெயரில்  அழைக்கபடும் அளவிற்கு நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளி கொடுக்கும் .குங்குமப்பூ உணவு  பதார்த்தங்கள், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு போன்றவற்றில் பயன்பட்டு நமக்கு பல நன்மைகளை வழங்கி வருகிறது .மேலும் உடல் நல பிரச்சனைகளான மன இறுக்கம், மன அழுத்தம், பார்வை கோளாறு மற்றும் ஞாபக சக்தி போன்றவற்றை சரி செய்து நம்மை ஆரோக்கியமாக வைக்கின்றது .மேலும் இதன் ஆரோக்கிய குணங்களை பற்றி நாம் பார்க்கலாம்

safron

1.குங்குமப்பூவை சாப்பிட்டு வந்தால் இதில் இருக்கும் சத்துக்கள் கருவிழி தசைகளை வலுவடைய செய்து, விழித்திரை சேதமடையாமல் தடுக்கிறது.

2.குங்குமப்பூவில் ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வளமான அளவில் இருப்பதால், இவை செரிமானத்தை ஊக்குவிக்கிறது.

3.குங்குமப்பூ பாலுணர்வை தூண்டக்கூடியது. விறைப்புத்தன்மை தொடர்பான பிரச்சினை உள்ள ஆண்கள் குங்குமப்பூவை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

4.குங்குமப்பூவுடன் சிறிதளவு சந்தனம் மற்றும் 2 ஸ்பூன் பால் இவை மூன்றையும் கலக்கி முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவாக இருக்கும்.