இந்த தேநீரை பருகினால் சுகர் பேஷன்டின் சர்க்கரையின் அளவில் மாறுதல்கள் ஏற்படும்.
பொதுவாக கொய்யா செடியின் வேர் ,இலை ,காய் ,பழங்கள் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் .இந்த கொய்யா இலை பல நோய்களுக்கு மருந்தாகிறது .கொய்யா இலை கஷாயம் இருமல் முதல் இதயம் சம்பந்தமான நோய்களை குணமாக்கும் ,மேலும் இந்த இலையுடன் தேன் சேர்த்து சாப்பிட உடல் எடை குறையும் .மேலும் இதன் நன்மைகளை பாக்கலாம்
1.சிலருக்கு பாக்டீரியா காரணமாக வயிற்றுபோக்கு ஏற்பட்டிருக்கும் .அவர்கள் கொய்யா இலையில் தேநீர் செய்து சாப்பிட,எந்த காரணத்தினால் வயிற்றுபோக்கு ஏற்பட்டிருந்தாலும் குணப்படுத்திவிடும்.
2.சிலருக்கு தைராய்டு இருக்கும் .தினமும் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும்.
3.அதுமட்டுமின்றி இளம் கொய்யா இலை தேநீரை பருகுவதால் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடின் அளவுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
4. 12 வாரங்கள் தொடர்ந்து இந்த தேநீரை பருகினால் சுகர் பேஷன்டின் சர்க்கரையின் அளவில் மாறுதல்கள் ஏற்படும்.
5.கொய்யா இலைகள் மலச்சிக்கலை போக்குவதுடன், இருமல், தொண்டை, காய்ச்சல் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றது.
6.மேலும் கொய்யா இலைகளை வாயில் போட்டு மென்றால், வயிற்றுப் புண், பல் வலி நீங்கும்.
7.கொய்யா இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறிய பின் தலையில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முடி வலுபெறும்.
8.மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடண்டுகள் பெருங்குடல், தொடர்பான புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது
.9.மேலும் கொய்யா இலைகள் வாய், சருமம் மற்றும் நுரையீரல் கேன்சரையும் தடுக்கிறது

