கொய்யா இலையால் குணமாகும் நோய்கள்

 
koyya leaf

சிலவகை மூலிகை செடிகளும் ,மரங்களும் நம் நோயை குணப்படுத்த இறைவன் நமக்கு கொடுத்த வரங்களாகும் .அந்த வகையில் இன்று நாம் கொய்யா இலையால் நம் உடலுக்கு கிடைக்க கூடிய நன்மைகளை பார்க்கலாம் .

கொய்யா இலை மிக்க நறுமணமிக்கது.இது நமக்கு நீண்ட நாளாக இருக்கும்   பல் வலியை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது . மேலும் இந்த இலைகள் புற்றுநோயை தடுக்கும் வல்லமை கொண்டது . இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

cancer

கொய்யா இலைகளை  வெந்நீரில் கலந்து அல்லது கொதிக்க வைத்து பருகினால் கட்டுக்கடங்காமல் படுத்தி எடுக்கும் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.மேலும் இந்த கொய்யா இலையை உண்டால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல், மண்ணீரல் போன்றன பலப்பட்டு நம் ஆரோக்கியம் சிறக்கும் .மேலும் கொய்யாக் கொழுந்து இலையை மென்று விழுங்கினால் செரியாமை, வயிற்று மந்தம், குடல் வாயு குணமாகி நமக்கு நல்லா பசி உண்டாகும் . கொய்யா இலையை அரைத்து காயம், புண் உள்ள இடங்களில் அதன் மேல் வைத்தால் விரைவில் அந்த காயங்கள் ஆறிவிடும் .மேலும் இந்த இலைகள் நுரையீரல் புற்று நோய்களில் இருந்து விரைவில் குணமாக்குகின்றது. கொய்யாவில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நம் உடலில் தோன்றும் கட்டி வளர்ச்சியை தடுக்கிறது.கொய்யா இலைத் தேநீர் குடித்து வந்தால் 12 வாரங்களில் உடல் எடை வெகு விரைவில் குறையும்.கொய்யா இலையில் உள்ள வைட்டமின்-C முகப்பரு மற்றும் .ஈறுகளில் ஏற்படும் இரத்தப்போக்கு மற்றும் வீக்கம் போன்றவற்றைத் தடுக்கின்றது