கொத்தமல்லியை கொதிக்க வச்சி குடிச்சா ,பெண்களின் எந்த பிரச்சினை சரியாகும் தெரியுமா ?

 
stomach

பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி என்பது 28 நாட்களுக்கு ஒரு முறை வருவது ,ஆனால் சில பெண்களுக்கு இது 24 நாளில் முன்கூட்டியே வருவதும் ,38 நாட்களுக்கு ஒருமுறை தள்ளி வருவதும் நடக்கிறது .இப்படி கன்னாபின்னாவென்று வந்தால் மருத்துவரை அணுகுவதோ இல்லை பின்வரும் இயற்கை வழிகளை பின்பற்றுவதோ நல்லது .அன்னாசி பழம் மாதவிடாய் கோளாறை சரிசெய்யும் .மேலும் யோகாசனம் ,இஞ்சி ,உடற்பயிற்சி ,இலவங்க பட்டை ,ஆப்பிள் சீடர் வினிகர் ,விட்டமின் டி போன்றவையும் இந்த கோளாறுகளை சரி செய்யும் ,மேலும் சில இயற்கை குறிப்புகளை பார்க்கலாம்

koththamalli seeds

1. மாதவிடாய் கோளாறு உள்பட ஏராளமான மருத்துவ குணங்களை கற்றாழை கொண்டுள்ளது.

2.கற்றாழை ஜெல்லை தேனுடன் கலந்து தினமும் காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனை நீங்கி புத்துணர்வு பெறலாம் .

3.மேலும் கற்றாழை ஜெல்லானது ஹார்மோன்களை சமநிலையில் வைக்கவும் உதவுவதால் மாதவிடாய் சுழற்சியினைச் சீர்ப்படுத்தி ஆரோக்கியம் தரும் .

4.150g தண்ணீரில் கொத்தமல்லியை கொதிக்க வைத்து தினமும் இரண்டு முறை குடித்தால் மாதவிடாய் வருவது முறையாக நடக்கும் 

5.இவைதவிர கொத்தமல்லி சூரணம், சுக்கு, மிளகு, திப்பிலி சூரணம், கண்டுபாரங்கி சூரணம் போன்றவையும் மாதவிடாய் வருவதற்கு உகந்ததாகும்