கொள்ளு எந்தெந்த நோய்களை கொல்லும் சக்தியுள்ளது தெரியுமா? .

 
health health

கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம்  வறுத்தும் சாப்பிடலாம்.
கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர  ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

கொள்ளு நன்மைகள் :

இரத்த சர்க்கரையை குறைக்கிறது :

கொள்ளு உட்கொள்வது இரத்த சர்க்கரையைக் குறைப்பதாக இந்திய வேதியியல் தொழில்நுட்பக் கழகத்தின் கண்டறிந்துள்ளனர்.

webdunia

கார்போஹைட்ரேட் செரிமானம் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் புரதம்-டைரோசின் பாஸ்பேடேஸ் 1β ஐச் கட்டுப்படுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

எனவே இதே நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது :

கொள்ளு பயரில் பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன.

சிறுநீர் பெருக்கியாகும் :

கொள்ளு நன்கு அறியப்பட்ட சிறந்த டையூரிடிக் ஆகும். சிறுநீர் பெருக்குவதில் உதவுகிறது.

சிறுநீரகக் கற்களைத் தடுக்கிறது :

டையூரிடிக் பண்புகள் காரணமாக, கொள்ளு சிறுநீரக கற்களை அகற்றுவதில் உதவுகிறது.

கொள்ளுப் பயரை வழக்கமான உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்வதன் மூலம் சிறுநீரகங்களில் கற்கள் உருவாகுவதைத் தவிர்க்கலாம்.

 

ஏனெனில் சிறுநீரக கற்களைக் கற்களை கரையக்கூடிய சில சேர்மங்கள் கொள்ளுப் பயரில் உள்ளன.

புண்களை ஆற்றுகிறது :

கானம் பயரில் உள்ள லிப்பிடுகள் அல்சர் எதிர்ப்பு செயல்பாட்டைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது.

ஆஸ்துமா நிவாரணம் :

கொள்ளுப் பயருடன் மிளகு கலந்து கொதிக்க வைத்து உட்கொள்வது  ஆஸ்துமா நோயாளிகளுக்கு நிவாரணம் தருகிறது.

இது இருமல், சளி மற்றும் எரிச்சலை குறைக்க உதவுகிறது. ஆஸ்துமாவுக்கு மருந்து இல்லை என்றாலும், இது உடனடி நிவாரணம் மற்றும் சுவாச பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது :

கொள்ளு பயறு சாப்பிடுவது உடல் பருமனை குறைக்க உதவுகிறது. ஏனெனில் இதில் உள்ள பினோல் காரணமாக கொழுப்பு திசுக்களை தாக்கும் திறனைக் கொண்டுள்ளது.

கொள்ளு பயிரின் செயல்திறன் பற்றி  “இளைத்தவனுக்கு எல்ல குடு, கொழுத்தவனுக்கு கொல்ல குடு” என்று விவரிகிறது.

குளிர் காலத்தில் சிறந்த உணவாகும் :

குளிர்காலத்தில் உங்களை சூடாக வைத்திருக்கிறது கொள்ளு சூப் வடிவில் உட்கொள்வது குளிர் காலத்தில் உடலை சூடாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

எலும்புகளுக்கு நல்லது :

கானம் பயரில் இரும்பு சத்து, கால்சியம் மற்றும் புரதம் அதிகம் உள்ளது. கொள்ளு, பயறு வகைகளில் அதிக கால்சியத்தை கொண்டுள்ளது.

மேலும் இதில் தாவர மூலங்களிடமிருந்து கிடைக்கும் கிடைக்கும் புறதங்களில் அதிக அளவு உள்ளது.

மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்துகிறது :

கொள்ளு பயரில் அதிக அளவில் இரும்பு சத்து உள்ளது. இது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை குணப்படுத்த உதவுகிறது. மேலும் இரத்த சிவப்பனுக்களின் எண்ணிக் கையையும் அதிகரிக்கிறது