சிறுநீரை அடக்குறவங்களை ,முடக்கி போடும் இந்த பிரச்சினையை செலவில்லாமல் தீர்க்கும் வழி

 
urine problems solution

சிறுநீர் கழிக்க வேண்டும் என்னும் உந்துதல் வரும் போதே அதை செய்து விட வேண்டும். இல்லையெனில் அது நாளடைவில் அதே பழக்கத்தை மன உணர்வை உண்டாக்கும். பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

சிறுநீர் கழிப்பதை தாமதமாக்கும் போது அடக்கி வைக்கும் போது அது சிறுநீர் கசிவை உண்டாக்கும். நாள்பட்ட நிலையில் இது சிறுநீர்ப்பையில் புதிய சிக்கலை உண்டாக்கும் என்கிறார்கள் இடுப்புத் தள பிரச்சனைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ நிபுணர்கள்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆயுர்வேதம் சொல்லும் வைத்தியம்! பலன் கிடைக்க எதை எப்படி எடுக்கணும்?

சிறுநீர் கழிப்பதில் தாமதப்படுத்துவது குழந்தைகளுக்கும் சிக்கலை உண்டாக்கும். சிறுநீரக மருத்துவர்கள் எப்போதாவது மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் அல்லது துர்நாற்றம் வீசும் சிறுநீருடன் குழந்தைகளை கவனிக்கிறார்கள். இது பொதுவாக சிறுநீர் பிடிப்புடன் தொடர்புடையது. அதனால் குழந்தைகளும் சிறுநீர் கழிப்பதை தாமதிக்காமல் செய்ய பழக்கப்படுத்துவது அவசியம்.

எப்போதும் சிறுநீர் கழிக்கும் உணர்வை அடக்கவே வேண்டாம். அதே நேரம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் கழிக்கும் முறை வந்தால் அதுவும் சிக்கலானதே இந்த நிலையில் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

​அரைகுறையாக சிறுநீர் கழிப்பது

அவசரமாக சிறுநீர் கழிக்கும் நிலையில் பாதியிலேயே நிறுத்தி விடுவதும் பிரச்சனையே. முழுமையடையாத சிறுநீர்ப்பை சிக்கல்களை உண்டாக்கும். சிறுநீரை அடக்குவதை போலவே சிறுநீரை தேக்கி வைப்பதும் மோசமான பாதிப்பை உண்டாக்கும். இது சிறுநீர் தொற்றுக்களை ஏற்படுத்தும் சிறுநீர்ப்பையில் சிறுநீர் தேங்குவதால் அதில் இருக்கும் உப்பு படிகங்களான  சிறுநீர்ப்பை கற்கள் உருவாக வாய்ப்புண்டு.

                                                    

சிறுநீர்ப் பாதையில் கற்களை எளியமுறையில் போக்க ஒரு சில உணவுகள் உதவுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு குடித்து வர சிறுநீர் கல் பிரச்னை தீரும்.

நன்கு வேக வைத்த பார்லி தண்ணீரை அதிகம் குடித்து வர அதிக சிறுநீர் பிரியும். சிறுநீர் அதிகம் வெளியேறுவதால் அதிலிருக்கும் உப்பு கற்கள் கரைந்து வெளியேறிவிடும். வாரம் ஒரு முறை பார்லி வேக வைத்த நீர் குடித்து வர சிறுநீரக கல் பிரச்னையே வராது.

வெயில் காலத்தில் இளநீர், மோர் போன்றவற்றை போதுமான அளவு குடித்து வரலாம். அகத்தி கீரையுடன் சீரகம் உப்பு சேர்த்து சமைத்து சாப்பிட நல்ல பலன் தரும்.

முள்ளங்கியை எடுத்து சாறு பிழிந்து, 30 கிராம் அளவிற்கு குடித்து வந்தால் சிறுநீரக பிரச்னை தீரும்.

சிறுநீரகங்கள் பலப்பட புதினா கீரை அருமையான மருந்து. தினமும் உணவில் புதினா கீரை சேர்த்து வருது நல்ல பலன் அளிக்கும்.

தேன், துளசி இலைச்சாறு கலந்த கலவையை ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்னையை வெகு விரைவில் தீர்த்து விடலாம். 

அத்திப்பழத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை தொடர்ந்து ஒரு மாதம் அருந்திவர சிறுநீரக கல் பிரச்னை வராது.

மாதுளம் பழத்தை உடைத்து அதன் முத்துக்களை எடுத்து சாறு பிழிந்து அதை கொள்ளு சாறுடன் 1:2 விகித த்தில் கலந்து அருந்திவர சிறுநீரக கல் கரையும்.

பாலுடன் வெள்ளிரி விதையை சேர்த்து மைய அரைது அதை ஒரு சின்ன கோலி குண்டு அளவிற்கு சாப்பிட்டு வர சிறுநீரக கல் கரைந்து இயல்பான நிலைமையை அடையலாம்.

இரண்டு லிட்டர் தண்ணீருடன் எலுமிச்சை சாற்றை கலந்து தினசரி 4 தேக்கரண்டி சிறிது சிறிதாக குடித்து வர அந்த தொந்தரவு இல்லாமல் போய்விடும்.

10 கிராம் வாங்கி பிரன்ச் பீன்ஸ் அதிலுள்ள விதை நீக்கி, அதை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அந்த கலவையை மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்துவிட்டு 10 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். பிறகு பீன்ஸ் வேகவைத்த 2 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். ஒரே முறையில் குடிக்க முடியவில்லை என்றால் சிறிது நேரம் இடைவெளி விட்டு குடித்து விட வேண்டும்.

வெறும் வயிற்றிலே அத்திப் பழங்களை நிரம்ப உண்டு வந்தால், மூத்திரப்பையிலுள்ள கற்கள் அகலும்.

அன்னாசிப் பழத்தை வெறும் வயிற்றிலே அடிக்கடி சாப்பிட்டு வந்தால், கற்கள் கரைந்துவிடும்.