கிட்னியை பாதுகாக்க செய்ய வேண்டியது என்ன தெரியுமா ?

 
kidney kidney

பொதுவாக நம் உடல் ஆரோக்கியத்துக்கு இதயம் ,நுரையீரல் போல கிட்னியும் நன்றாக இருக்க வேண்டும் .அதனால் கிட்னியை பாதுகாக்க அதில் கல் உண்டாகாமலும் ,யூரிக் ஆசிட் உண்டாக்காமலும் பாதுகாப்பது முக்கியம் இனி கிட்னியை எப்படி பாது காக்கலாம் என்று இந்த பதிவில் பாக்கலாம் 

1. நாம் சாப்பிடும் உணவுகள் மூலம், நம் உடலில் யூரிக் ஆசிட் உற்பத்தியாகி விடுகிறது  
2.இந்த யூரிக் ஆசிட் ரத்தத்தில் கரைந்து சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது.
3.. நாம் அதிகம் தண்ணீர் குடிக்கவில்லையென்றால் இந்த யூரிக் ஆசிட் நம் உடம்பிலேயே தங்கிவிடும்  
4.மேலும் மேலும் யூரிக் அசிட் அதிகப்படியாக உற்பத்தியாகும்.
5. நம் உடல் ஆரோக்கியமாய் இருக்க சிறுநீரகம் சீராக இயங்க வேண்டும். அப்படி சிறுநீரகத்தில் பிரச்சினை இருந்தால் யூரிக் ஆசிட் உடலை விட்டு வெளியேறாமல் தங்கி விட வாய்ப்புண்டு . 
6.இப்படி யூரிக் ஆசிட் தங்கி விட்டால் , ஹைப்பர்யூரிசிமியா பாதிப்பு ஏற்படும்.
7. யூரிக் ஆசிட் உடலை விட்டு வெளியேவில்லயென்றால், அவை சிறுநீரகத்தில் சிறுநீரக கற்கள் உருவாகி கிட்னி பாதிப்பு வரும் 
8. அதனால் கிட்னியை பாதுகாக்க நிறைய சுத்தமான தண்ணீரை மட்டுமே பருக வேண்டும். 
9.சிலர் அசுத்தமான தண்ணீர் குடிப்பர் .இப்படி  குடித்தால் கூட உடலில் யூரியா ஆசிட் உற்பத்தியாகும்.
10.. நாம் எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு சிறுநீர் உடலை விட்டு வெளியேறினால் உடல் ஆரோக்கியம் நல்லாயிருக்கும் .
11. கிட்னியை பாதுகாக்க முடிந்தவரை அதிகமாக குளிர்பானங்கள், ஆல்கஹால் குடிப்பது தவிர்க்க வேண்டும்.
12.. அதிக தண்ணீர் குடிப்பதால் சிறுநீர்ப்பையிலிருந்து சிறிய கற்கள் வெளியேறி விட்டாலே uric acid crystals-களை தவிர்க்க முடியும்.