கிட்னி பிரச்சினையுள்ளவங்க கிட்னியை பாதுகாக்க இதையெல்லாம் கிட்டவே சேர்க்காதிங்க

 
kidney

சிறுநீரகங்கள் மனித உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். அவற்றின் முக்கிய நோக்கம் இரத்தத்தில் இருந்து அசுத்தங்களை வடிகட்டுவதே ஆகும். மேலும், அவை உடலில் உள்ள கனிம அளவை பராமரிப்பது போன்ற பிற செயல்பாடுகளையும் மேற்கொள்கின்றன.

இவற்றை சரியான முறையில் பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியமாகும். அதிலும் சரியான உணவுகளை தேர்ந்தெடுப்பது அவசியமாகும் ஏனெனில் சில கேடு விளைவிக்கும் உணவு வகைகளும் உள்ளன.

முக்கியமாக சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அவற்றை அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரகங்களுக்கு சேதம் ஏற்படலாம். எனவே அந்த உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

அதிகமாக மது அருந்தினால் சிறுநீரகம் பாதிக்கப்படும். அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது சிறுநீரகத்தின் செயல்பாட்டில் சிக்கல்களை ஏற்படுத்தும், அது உங்கள் மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

  உப்பை உணவில் எடுத்துக் கொண்டால், அது திரவத்தின் அளவை அதிகரிக்கிறது, இதன் காரணமாக சிறுநீரகத்தில் அதிக அழுத்தம் மற்றும் சேதம் ஏற்படலாம்.

 பால், பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்ற பால் பொருட்களை அதிகமாக உட்கொள்வது சிறுநீரகத்திற்கு நல்லதல்ல. பால் பொருட்களில் அதிக புரதம் உள்ளது, இது சிறுநீரகத்தை சேதப்படுத்தும்.

 இறைச்சியில் புரதம் மிகவும் அதிகமாக உள்ளது, சிறுநீரகத்தை பாதிக்கும் இத்தகைய இறைச்சியை நம் உடலுக்கு ஜீரணிக்க கடினமாகிறது.

   சந்தையில் கிடைக்கும் இனிப்புகள், குக்கீகள் மற்றும் பானங்கள் ஆகியவற்றில் செயற்கை இனிப்பு அதிகம் பயன்படுத்தப்படுகிறது, இது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

மாதிரிப்படம்

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நிறைய உணவுகள் உள்ளன. அவற்றை சரியாக சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தை மட்டுமின்றி, உடல் முழுவதையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம்.

சிவப்பு குடைமிளகாய்

சிவப்பு குடைமிளகையிகுடைமிளகாயில் பொட்டாசியம் குறைவாகவும், வைட்டமின்களான ஏ, சி மற்றும் பி6, ஃபோலிக் ஆசிட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைப்பதோடு, எந்த வகையான புற்றுநோயும் வராமல் தடுக்கலாம்.

முளைகட்டிய பயிர்கள்

முளைக்கட்டிய பச்சைப் பயிர்களை டயட்டில் சேர்ப்பது மிகவும் நல்லது. இந்த முளைக்கட்டிய பயிர்கள் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, சிறுநீரகத்தில் கற்கள் வராமலும் தடுக்கலாம்.