வாழைப்பழத்தை எந்த நோயாளி சாப்பிட கூடாது தெரியுமா ?

 
banana

பொதுவாக  கிட்னியை பாதுகாத்து கொள்ள  பின் வரும் உணவுப்பட்டியலை பார்த்து அதன் படி சாப்பிட்டு தங்களின் உடல் நலத்தையும் கிட்னியையும் பாதுகாத்து கொள்ளவும்

1.அவகோடா, பூசணிக்காய், சர்க்கரைவள்ளி கிழங்கு, போன்ற பழங்களில் அதிக அளவில்  பொட்டாசியம் நிறைந்துள்ளது .எனவே இதை தவிர்ப்பது நல்லது
2.சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள்  சோடியம் அதிகம் சேர்க்கப்பட்ட பாக்கெட் உணவுகளை தவிர்ப்பது நல்லதாகும்.

kidney
3.சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் பழுப்பு நிற அரிசியை தவிர்ப்பது நல்லதாகும். மேலும் கைக்குத்தல் அரிசி போன்றவற்றை மருத்துவர்கள் பரிந்துரை பெயரில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
4. சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாடும் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்வது மேலும் தீவிர பிரச்சனைக்கு வழிவகுக்கும்,அதனால் அதை தவிர்ப்பது நல்லது
 5.சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் எலும்புகளை வலுப்படுத்தும் பால் பொருட்களை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
6.பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிக அளவில் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் நபர்கள் கூட எடுத்துக் கொள்ளக் கூடாது.
7.கிட்னி பாதிப்புள்ளவர்கள் இந்த உணவுகளை எடுத்து கொள்வதில் அதிக கவனம் தேவை