சிறுநீரக நோய் தொற்றை தடுப்பது எப்படி ?

 
kidney

தோல் அல்லது மலக்குடலில் இருந்து பரவும் பாக்டீரியாக்கள் நம் சிறுநீர் பாதையில் நோய் தொற்றுக்களை உண்டாக்கி நமக்கு பெரும் பாதிப்பை உண்டாக்குகின்றன .சிறுநீர்ப்பை நோய்த்தொற்றின் அறிகுறிகள்:

அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வுடன் குறைவாக சிறுநீர் போவது .,,சிறுநீர் துவாரம் அடிக்கடி எரியும்,அடிவயிற்றில் தசைப்பிடிப்பு,சிலருக்கு சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறலாம்.,சிலர் வெகுவாய் சோர்ந்து இருப்பர்.சிலருக்கு சிறுநீர் நிறம் மாறி இருக்கலாம்.

சிறுநீர் பாதை நோய் தொற்று எளிதில் வராமல் எப்படி தடுக்கலாம் என்று பார்க்கலாம்

1.தினமும் இரண்டரை லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலம் பலவிதமானகிட்னி  பிரச்சினைகளில் இருந்து உடலை பாதுகாக்கலாம்.

water

2.மது அருந்தும் பழக்கத்தை கைவிடுதல், காபி, டீ, குளிர்பானங்களுக்கு பதிலாக இயற்கையில் கிடைக்கும் இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும்.

3.நாலு மணி நேரத்திற்கு ஒரு முறை அல்லது தோன்றும்போது சிறுநீரை அடக்காமல் சிறுநீர் கழிக்க வேண்டும். இதனால் சிறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

4.பருத்தியில் ஆன உள்ளாடைகள்  அணிவது, உடலுறவிற்கு பிறகு சிறுநீர் கழிப்பது போன்றவை சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் சிறுநீர் பாதை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பைத் தரும்.