கீழா நெல்லி இலையை மோரில் கலந்து குடித்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
keezhanelli

அதிகம் இரவில் கண் விழிப்பதாலும் ,பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்பதாலும் நம் உடலில் பித்தம் அதிகமாகிறது .இந்த பித்தம் அதிகரித்தல் நம் கல்லீரலுக்கு கேடு உண்டாக்கும் .

மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது.

 காமாலை நோய் வைரஸ் கிருமிகளாலும், சில வகை மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது.

மேலும் பிரிட்ஜில் உணவு பொருட்களை வைத்து அடிக்கடி சூடு செய்து சாப்பிடுவதாலும் ,தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்காமல் இருப்பதாலும் உண்டாகிறது .

அற்புத மருத்துவ குணம் நிறைந்த ...

சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மலக்கட்டு, கழிச்சல், சுரம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போன்ற அறிகுறிகள் காணப்படும்.இதற்கு சிகிச்சையாக பின்வரும் இயற்கை முறைகளை பயன் படுத்தலாம்

1.கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம். அரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.

2.சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.