கருப்பை நீர்க்கட்டி குணமாக சில இயற்கை வழிகள் .

 
murungai

இன்று மாறிவிட்ட வாழ்க்கை முறை காரணமாக பல பெண்களுக்கு கருப்பை நீர் கட்டிகள் உருவாகிறது .இந்த கட்டியால் பல பெண்கள் துயரத்தை அனுபவித்து வருகின்றனர் .ஹார்மோன் ஏற்ற தாழ்வுகளாலும் ,மன அழுத்தத்தாலும் இந்த நீர்கட்டிகள் உருவாகும் .இதில் பெரும்பாலும் 15 வயது முதல் 25 வயது உள்ள பெண்களே பாதிக்கப்படுகின்றனர் .இதனால் கருத்தரிப்பில் அந்த பெண்களுக்கு பாதிப்பு உண்டாகிறது .இதன் காரணமாக அந்த பெண்கள் சமூகத்தில் பெரும் போராட்டத்தை சந்திக்கின்றனர் .இந்த பிரச்சினைக்கு கழற்சிக்காய் நல்ல பலன் அளிக்கும் .இந்த காயை உடைத்தால் அதிலிருக்கும் பருப்பை ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் போதும் நல்ல பலன் கொடுக்கும் .இவர்களுக்கு ஆண் ஹார்மோன் சுரப்பதால் அவர்களுக்கு மீசை தாடி வளரும் வாய்ப்பு அதிகம் .மேலும் சில இயற்கை வைத்திய குறிப்புகளை கொடுத்த்துளோம்

stomach

1.கருப்பை நீர்க்கட்டி குணமாக காலையில் தூங்கி விழித்ததும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஏதாவது ஒரு நீரை பருகலாம்.

2.பெண்களின் கருப்பை நீர்க்கட்டி குணமாக இரவில் வெந்தயத்தை ஊற வைத்து அந்த நீரை காலையில் பருகலாம்,

3.கருப்பை நீர்க்கட்டி குணமாக முருங்கை இலையை கொதிக்க வைத்து அந்த நீரை பருகலாம்,

4.கருவேப்பிலை இலையை பச்சையாக மென்று பின் நீர் குடிக்கலாம், இதனால் கருப்பை நீர்க்கட்டி குணமாகும் 

5.கருப்பை நீர்க்கட்டி குணமாக பட்டை இஞ்சி இரண்டையும் கொதிக்க வைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம்.

 

6.கருப்பை நீர்க்கட்டி குணமாக உங்கள் காலை உணவில்  கேரட், பீன்ஸ், பீட்ரூட், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை வைத்து உப்புமா அல்லது தோசை போன்ற ஏதேனும் செய்து சாப்பிடலாம்.