கருஞ் சீரகத்தால் நம் உடல் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா ?

 
karunseeragam

நமது உடலுக்கு சீரகம் ஏரளமான நன்மைகளை அள்ளி கொடுக்கிறது .அதிலும் கருஞ்சீரகம் எண்ணற்ற நன்மைகள் நிறைந்து காணப்படுவதால் இதை சித்த வைத்தியத்தில் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்

பலவித நோய்களுக்கு மருந்தாகும் ...

இவ்வளவு பவர் உள்ள கருஞ்சீரகத்தை நமது உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் நியாபக சக்தி அதிகரித்து ,நமது மூளைக்கு அளவற்ற சக்தியை கொடுக்கிறது . அதுமட்டுமல்லாது தலைவலி, ஆஸ்துமா போன்ற பிரச்சனையுள்ளவர்களுக்கு இது சிறந்த அரு மருந்தாக செயல்பட்டு நம் நோய் தீர்க்கும் சஞ்சீவியாக செயலாற்றுகிறது

அது மட்டுமல்லாமல் மனித சமுதாயத்துக்கு சவாலாக இருக்கும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்பு கருஞ்சீரகத்திற்கு பெருமளவு  உண்டு.

கருஞ்சீரகத்தை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பாக்ட்டீரியா வால் மனிதனுக்கு உண்டாகும் நோய்களிலிருந்து எளிதாக தப்பிக்கலாம்

மேலும் கருண்சீரகத்தில் இருக்கும் சில பொருட்கள் நம்  கல்லீரலைப் பாதுகாத்து ,சுகரை குறைத்து ,அல்சரை அடியோடு விரட்டி ,கொழுப்பையும் குறைக்கிறது .