கடலளவு உடலுக்கு நன்மைகள் தரும் கடல் பாசி

 
kadalpasi kadalpasi

பூமிக்கு மேல் உள்ள சில தாவரங்கள் நமக்கு நிறைய மருத்துவ நன்மைகளை கொடுப்பது போல கடலுக்கு அடியில் வளரும் கடல் பாசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது .மேலும் இது ரொட்டி ,பாலாடை கட்டியை பதப்படுத்தவும் ,இறைச்சி வகைகளை டின்களில் அடைத்து வைக்கவும் பயன்படுகிறது .மேலும் இந்த கடல் பாசியால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

kadal pasiyin nanmaigal, இந்த கடல்பாசியில ...

 1.கடல் பாசியில் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கச் செய்யும் சத்துக்கள் அடங்கியுள்ளது

 2.சிலர் தைராய்டு கோளாறால் கருத்தரிக்க முடியாமல் இருப்பர் .அவர்கள் கடல் பாசியை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைபர் தைராய்டு ஆகிய இரண்டுமே கட்டுக்குள் இருப்பதோடு கருவும் சீக்கிரம் உண்டாகும் .

 3.சிலர் கொலஸ்ட்ரால் பிரச்சினையால் நிறைய மாத்திரை எடுத்து கொள்வர் ,அவர்கள் கடல் பாசியில் அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளும்போது கொலஸ்டிரால் குறைவதோடு இதய ஆரோக்கியமும் மேம்படும். மேலும் உடல் எடையை குறைக்க உதவும் .வயிறு பிரச்சினை வராமல் பாதுகாக்கும்

 

4.சர்க்கரை நோய் உள்ள சிலர் அது கட்டுக்குள் வராமல் அவஸ்த்தை படுவர் .இப்படி நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் உணவில் அடிக்கடி கடல்பாசியைச் சேர்த்துக் கொள்வது நல்லது. இது ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுக்குள் கொண்டு வருவதோடு நீரிழிவையும் கட்டுப்படுத்தி நம் ஆரோக்கியத்தை காக்கும்