ஜங்க் ஃபுட்டால் குழந்தைகளுக்கு உண்டாகும் பாதிப்புகள்

 
chennai food festival

பொதுவாக ஜங்க் புட் என்றால் மூன்று வேளை உணவுகளை தவிர ஸ்னாக்ஸ் என்ற பெயரில் தயாராகும் பிஸ்ஸா ,பர்கர் ,பிரெஞ்சு பிரைஸ் ,மற்றும் நொடிப்பொழுதில் தயாரிக்கும் அசைவ உணவுகள் ,எண்ணெயில் பொரித்த உணவுகள் எல்லாமே ஜங்க் புட் வகையை சேர்ந்தவைதான்.எனவே இந்த உணவுகளை தொடர்ந்து குழந்தைகள் சாப்பிட்டால் பலவிதமான பக்க விளைவுகளை உண்டாக்கும் .

junk food

என்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்?

சிறுவர் முதல் பெரியவர் வரை  ஜங் புட்களை அதிகம் உட்கொள்வதால், மூளையில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு மன அழுத்தம், பதற்றம், உடற்பருமன் போன்ற மன பிரச்சனைகளை உண்டாக்கும் . 

  கொழுப்புச்சத்து அதிகம் கொண்ட இவை  குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு, மறதி, விழிப்பு நிலை குறைபாடு, புலன் உணர்வு செயல்பாட்டில் மந்தம் ஆகிய குறைபாடுகளை உண்டாக்குகின்றன  

வறுத்த உணவுகள் வகை உணவுகள் உடலின் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன. இதனால் அல்சீமர்ஸ் போன்ற மறதி நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்

இனிப்பை தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு, நரம்பியல் கோளாறுகளும் ஏற்படுகிறது. மேலும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்கள், இனிப்புகள், செயற்கை ஜூஸ் வகைகளும் இந்த பாதிப்புகளை உண்டாக்கும்