சுக்குடன் சிறிதளவு பால் சேர்த்து அதை தேய்க்க எந்த வலி போகும் தெரியுமா ?

 
moottu pain tips from aththi milk moottu pain tips from aththi milk

பொதுவாக முன்பெல்லாம் பெரியவர்களுக்குத்தான்  மூட்டு வலி ஏற்படும் .ஆனால்  இந்த மூட்டு வலி இப்பொழுது இள வயதினருக்கும் ஏற்பட்டு தொல்லையை கொடுக்கிறது. இப்படி ஏற்படக்கூடிய உங்களுடைய மூட்டு வலியை உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய எளிய பொருள்களைக் கொண்டு எப்படி விரட்டி விடலாம் என்று இந்த பதிவில் பாக்கலாம் 

1.அடிக்கடி சிறியவர் முதல் பெரியவர் வரை அவதிப்பட்டு வரக்கூடிய உடல் வலிகளில் முக்கியமான ஒன்று மூட்டு வலி. 
2.கொடுமையான வலியை தரும் மூட்டு வலி வந்தாலே எந்த வேலையும் செய்ய முடியாது. 
3.மேலும் ஒரு சிலருக்கு காலையில் தூங்கி எழும்பொழுதே  இந்த மூட்டுகளில் வலி ஏற்பட்டு விடும் 
4.இந்த  மூட்டு வலியை போக்கக்கூடிய அந்த அற்புதமான இயற்கை பொருள் சுக்கு மற்றும் பால். 
5.பல்வேறு ஆரோக்கியம் மிக்க சுக்கு உடலில் ஏற்படக்கூடிய வலியை மிக வேகமாக குணமாக்க கூடிய ஒரு அற்புதமான பொருள்.
6.இந்த மூட்டு வலியை போக்க முதலில் நீங்கள் சுக்குடன் சிறிதளவு பால் சேர்த்து அதை மையாக அரைக்க வேண்டும். 
7.பிறகு இந்த கலவையை நன்றாக சூடாக்க வேண்டும்.
8.சூடான இந்த சுக்கு கலவையை இளம் சூடாக வரும்வரை வைத்திருக்கவும் 
9.அதன் பிறகு உங்களுடைய கை மற்றும் கால் மூட்டுகளில் வலி இருக்கக்கூடிய பகுதிகளில் நன்றாக தடவி மசாஜ் செய்து வர வேண்டும் .
10.இந்த மசாஜை தொடர்ந்து நீங்கள் இப்படி செய்து வரும் பொழுது உங்களுடைய கை, கால் மூட்டுகளில் ஏற்படக்கூடிய வலி விரைவில் குணமாகும்.