தூக்க மின்மையிலிருந்து வெளியே வர என்ன செய்யணும் தெரியுமா ?
பொதுவாக நம் உடலில் தோன்றும் பல்வேறு நோய்களுக்கு காரணம் நம் உடல் நன்றாக ஓய்வெடுக்காமல் உழைப்பதுதான் .மேலும் இரவில் எட்டு மணி நேரம் நல்லா தூங்கி எந்திரித்தால் பல்வேறு நோய்க்களின் பிடியில் சிக்காமல் தப்பலாம் .அப்படி தூக்கமின்மை பிரச்சினையை சரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1. இன்றைய இளைய தலைமுறையினர் செல்போன், லேப்டாப் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துவதால் இரவில் சீக்கிரம் தூங்குவது கிடையாது.
2.இதனால் கண் எரிச்சல், தூக்கமின்மை போன்ற பல பிரச்சினைகளில் நாம் சிக்கிக்கொண்டு அவஸ்த்தை படுகின்றனர்
3.மேற்கூறிய தூக்க மின்மையிலிருந்து வெளியே வர இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை உடல் ஓய்வில் தூக்கத்தில் இருக்க வேண்டும்.
4.அப்பொழுதுதான் ஜீரண மண்டலம், சுவாச மண்டலம் நன்றாக இயங்கி நம் ஆரோக்கியம் சிறக்கும்
5.நன்றாக தூங்குவதால் நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கி, சிறுகுடல் நன்கு இயங்கும்.
6.இரவில் தூங்கவில்லையென்றால் அஜீரணக் கோளாறு, அல்சர், வயிற்றில் கட்டிகள், கேன்சர் கூட வரலாம். .
7.பொதுவாக இரவில் நீண்ட நேரம் தூக்கம் வரவில்லையென்றால், புத்தகம் படிக்கலாம். அப்போது தானாக தூக்கம் வரும்
8.நீங்கள் தூங்க செல்லும் முன்பு உங்களுக்கு பிடித்தமான புத்தகத்தை வாசித்தால் நிச்சயம் நிம்மதியான தூக்கம் வரும்.
9.நிம்மதியான தூக்கம் வேண்டும் என்றால், இரவில் தூங்கச் செல்லும் முன் மஞ்சள் பால் குடிக்கலாம். நிச்சயம் பலன் உண்டு.
10.ஒருவருக்கு தூக்கம் வரவில்லையென்றால், இரவில் தூங்கச் செல்லும் முன் தேநீர் குடிக்கலாம்.
11.இரவில் தூங்கச் செல்லும் முன் ஒரு குளியல் போடலாம். இரவில் குளித்தால் ஆழ்ந்த தூக்கத்தை பெறுவீர்கள்.
12.தினமும் தூங்கச் செல்லும் முன் மூச்சு பயிற்சி செய்யலாம்.இதனால் தூக்கமின்மை விலகி நல்ல பலனை கொடுக்கும்.


