விஷ பூச்சி கடிக்கு சில வீட்டு வைத்தியங்கள்
ஒருவருக்கு இரவு நேரத்தில் தோட்டத்தில் ஏதாவது விஷ ஜந்துக்கள் கடித்து விட்டால் ,கடித்த பூச்சியை பற்றி தெரிந்தால் மட்டுமே முறையாக நாட்டு வைத்தியம் செய்ய முடியும் .அதனால்தான் ஒருவர் கடிபட்டு வந்தால் அவர்க்கு ஆடு தின்னா பாளை வேரை கொடுத்து சாப்பிட சொல்வார்கள் .அப்படி சாப்பிடும்போது இனிப்பு சுவையிருந்தால் நல்ல பாம்பு கடித்தது என்றும் ,கசப்பு சுவையிருந்தால் பாம்பு அல்லது வேறு ஏதோ பூச்சி கடித்து விட்டது என்றும் கண்டறியலாம் .தேள் கொட்டினால் உடனே எலுமிச்சை விதையுடன் ,உப்பை சேர்த்து சாப்பிட சொன்னால் விஷம் இறங்கி விடும் .மேலும் கடி வாயிலும் லெமன் சாறு மற்றும் உப்பை தடவி விட வேண்டும்
1. குப்பைமேனி செடிகள் இலைகளின் சாற்றை பிழிந்து எந்த பூச்சி கடித்திருந்தாலும் அந்த கடிபட்ட இடத்தில் தடவ வலி மற்றும் கடுகடுப்பு குறையும் விஷமும் உடனே இறங்கி விடும்
2 .தேனீக்கள் கொட்டினால் , தேனீ கொட்டிய இடத்தில் வெங்காயத்தை வெட்டி சூடு பறக்க தேய்த்தால் குணம் கிடைக்கும். வெறும் கைகளால் தேய்க்க கூடாது
3 .சிலரை தேள், நட்டுவாய்க்காலி போன்றவை கொட்டினால், கொப்பரை தேங்காயை நன்றாக மென்று தின்றால் விஷம் உடனடியாக இறங்கி விடும்
4 .சிலரை பலவகை வண்டுகள் கொட்டி விடும் அல்லது கடித்து விடும் ,அப்போது உடனே பப்பாளி மரத்தின் இலையை சாறு பிழிந்து, கொட்டப்பட்ட இடத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து தடவி வர நல்ல பலன் கிடைக்கும் .
5. சிலரை பூச்சி கடித்து விடும் .அப்போது கரிசலாங்கண்ணியின் இலைகளை சாறெடுத்து, அதில் பெருங்காயத்தை இழைத்து, பூச்சி கடிபட்ட இடத்தில் பற்று போட விஷம் உடனே இறங்கி பலன் உண்டு

