நோய் எதிர்ப்பு சக்தி பத்தலைன்னு சொல்றவங்க தினம் பித்தளை பாத்திரத்தில் சாப்பிட்டால் எத்தனை நன்மை தெரியுமா ?

 
pithalai

உடல் நலம் காக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஆயுர்வேத முறைப்படி, சமைக்கும் முறைகளில் மட்டுமல்லாமல், சமைக்கும் பாத்திரங்களிலும் முக்கியத்துவம் காட்டினார்கள். மூலிகைகள் கொண்டும், தங்கம், வெள்ளி, மரகதங்கள், மாணிக்கங்களால் ஆன பாத்திரங்களை பயன்படுத்தினார்கள். இது ஒவ்வொரு பாத்திரத்திற்கு ஒரு பயன்பாடும், அதற்கான பயன்களும் இருக்கிறது.

ஆனால் இன்றைய நவீன, உலகில், விரைவில் சமைப்பதற்கு ஏற்றவாறு பொருள்கள் மாறுபடுகிறது. எஃகு, கண்ணாடி, எவர் சில்வர், நான் ஸ்டிக் போன்ற பொருள்களை பயன்படுத்துகின்றனர். இதனால் உடலுக்கு தீங்கு விளைகிறது.  நீண்ட நாட்களாக இதை பயன்படுத்தி கொண்டு இருப்பதால், உடலுக்கு நிறைய தீமைகள் விளைகிறது.
பித்தளை பாத்திரத்தில் பயன்கள்

திருமணம் என்றால் இன்றும் பெண்களுக்கு சீதனமாக கொடுத்து அனுப்புவதில் முதன்மையானது பித்தளை பாத்திரங்கள்தான். முன்னோர்கள் ஏன் இந்த பித்தளை பாத்திரங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதில் அப்படி என்ன உள்ளது என்றால் கேள்விகள் எழுந்தாலும் இன்றைய நவீன வாழ்கை முறையில் நமது முன்னோர்கள் மேற்கொண்டு வந்த பழக்க வழக்கங்கள், பித்தளை பாத்திரத்தின் பயன்பாடுகள் என அனைத்தும் முற்றிலும் மறக்கப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.

அதனால், இன்றைய தலைமைமுறை ஏராளமான நோய் நோடிகளுக்கு ஆளாகி வரும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதற்கு என்னதான் தீர்வு என நீங்கள் கேட்கலாம். வேறு வழியே இல்லை நமது முன்னோர்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை பின்பற்றியே ஆக வேண்டும்.கடந்த 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நமது முன்னோர்கள் பித்தளை பாத்திரம் கிருமிகளை நீக்கும் தன்மை கொண்டது என்பதை கண்டு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, ஒலிகோடைனமிக் (Oligodynamic) என்று அதை குறிப்பிடுவார்கள். உலோகங்களின் உயிர் இயக்க விளைவாக உள்ள பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைப்பதன் மூலம் அதில் இருக்கக்கூடிய கிருமிகள் 8 மணி நேரத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. அது மட்டும் இன்றி அந்த தண்ணீரில் பித்தளை பாத்திரத்தில் உள்ள  தாமிரம் கலப்பதன் மூலம் அதை நாம் பருகும்போது உடல் செயல்பாட்டிற்கு ஊக்கம் தருகிறது. மேலும் உடல் சூட்டையும் அந்த தண்ணீர் முற்றிலுமாக குறைக்க உதவுகிறது