குழந்தைகள் போனிலேயே இருப்பதால் என்ன பாதிப்பு வரும் தெரியுமா ?

 
child good habit tips

பொதுவாக இப்போது எல்லாம் பெரும்பாலும் குழந்தைகள் டிவி, மொபைல் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் மூழ்கி விடுகின்றன. பெரும்பாலான குழந்தைகள் விளையாடுவதோ அல்லது உடற்பயிற்சி செய்வதோ அரிதாக உள்ளது .இதனால் உடலில் இம்மியூனிட்டி பவர் அவர்களுக்கு குறைந்து விடுகிறது .எனவே பிள்ளைகள் ஆரோக்கியமாய் வளர என்ன தேவை என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .
 1. குழந்தைகள் போனிலேயே இருப்பதால் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்குகிறது. 
2.அதேபோல் வளரும் இளம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் மிக அதிக அளவில் கொடுக்க வேண்டும் . 
3.ஆகவே, குழந்தைகளுக்கு வண்ணமயமான காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை சாப்பிட கொடுக்கவும்.
4. ஆரோக்கியமாய் பிள்ளைகள் வளர  வைட்டமின் சி, வைட்டமின் டி மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும்.
5.அரசின் சுகாதாரத்துறை பரிந்துரை செய்யும் தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு தவறாமல் செலுத்தினால் நோயின்றி குழந்தைகள் இருக்கலாம்  ,
6. இந்த தடுப்பூசிகள் பெரும்பாலான தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து இது தற்காத்துக் கொள்வதற்கான பெரும் அரணாக அமைகிறது.
7.மேலும் நாம் அம்மை, காசநோய், மஞ்சள்காமாலை, இளம்பிள்ளை வாதம் போன்ற பெரும் நோய்களை தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் மூலமாகத்தான் நாம் வெற்றி கொண்டிருக்கிறோம் 
8.ஆகவே, குழந்தைகளை அன்றாடம் மாலை வேளையில் விளையாடுவதை நாம் ஊக்குவிக்க வேண்டும்.