இலவங்கப்பட்டை தண்ணீருக்குள் அடங்கியுள்ள ஆரோக்கிய ரகசியம்.

 
lavangam lavangam

உலகளவில் இந்தியா பல மூலிகை மற்றும் மசாலா பொருட்களின் புகலிடமாக உள்ளது .இங்கிருந்து பல நாடுகளுக்கு மூலிகைகள் ஏற்றுமதியாகிறது எனலாம் .இந்நிலையில் நம் நாட்டில் உற்பத்தியாகும் இலவங்க பட்டை மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .சர்க்கரை நோயாளிகள் தங்களின் இன்சுலின் உற்பத்திக்கு இந்த இலவங்க நீரை குடித்து வரலாம் .அப்போது அவர்களின் டைப் 2 சுகர் அளவு கட்டுக்குள் இருக்கும் .இந்த இலவங்க நீர் எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம் .முதலில் இந்த பட்டையை தூளாக்கி அதை தன்னீரில் சேர்த்து குடிக்கலாம் .அல்லது அந்த பட்டையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து விட்டு ,அந்த நீரை மறுநாள் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும் .மேலும் இந்த இலவங்க பட்டை நீரின் நன்மைகளை பார்க்கலாம்

இலவங்கப் பட்டையின் மருத்துவப் ...

 

1.இலவங்கப்பட்டை தண்ணீரை நீங்கள் குடிக்கும் வரும்பொழுது அது உங்களுடைய உமிழ்நீர் மற்றும் செரிமான நொதிகளின் உற்பத்தியை தூண்டுவதன் மூலமாக செரிமானத்தை சீராக்க உதவுகிறது.

2.இது  குமட்டல், நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது. இலவங்கப்பட்டை ஒரு இயற்கை கிருமி நாசினி.

3.இது உங்களுடைய குடலில் உள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களை கொல்லும்.

4.பெண்களிடையே  உடலில் ஏற்படும் அடிப்படை ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, கருப்பைகள் அதன் மேற்பரப்பில் சிறிய நீர்க்கட்டிகளை உருவாக்க முனைகின்றன.  இலவங்கப்பட்டை நீர் கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளைக் குறைக்க உதவும் என சொல்கிறது.