வெதுவெதுப்பான நீரில் தேன் சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா ?
தேன் மிக சிறந்த மருத்துவ குணமுள்ள ஒரு பொருள் என்று ஆயுர்வேதம் கூறுகிறது .இது நமக்கு பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உடையது .இதில் 70 வகையான வைட்டமின்கள் அடங்கியுள்ளன .இதை வயிற்றின் தோழன் என்று கூட கூறுவார்கள் .ஆனால் கலப்பிடமில்லாத சுத்தமான தேன் கிடைப்பது அரிதான ஒன்று .இதை மூட்டு வலியுள்ளோர் தங்களின் மூட்டுக்களில் தேய்த்து உள்ளுக்கும் சாப்பிட்டால் மூட்டு வலி பறந்து போகும் .

தேனின் பயன்கள்:
1.சளி மற்றும் காய்ச்சலால் அவதியுறுவோர் வெதுவெதுப்பான நீரில் தேன் சேர்த்து குடித்து வந்தால் தொண்டையில் உள்ள புண்,வரட்டு,இருமல்,சளி,காய்ச்சல் போன்றவற்றில் இருந்து முழுவதுமாக நிவாரணம் கிடைக்கும்
2.செரிமான கோளாறு உள்ளோர் தினமும் தேன் குடிப்பதால் செரிமான மண்டலத்தில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றி செரிமான மண்டலம் சீராக இயங்குவதற்கு உதவுகிறது.
3.சுத்தமான தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் உடலிலுள்ள இரத்தத்தை சுத்தப்படுத்துவதற்கு உதவி நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது .
4.இம்மியூனிட்டி பவர் குறைவாக உள்ளோர் தேன் குடித்தால் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைகிறது.
ஒவ்வாமை பிரச்சினையிள்ளோர் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் உடலில் அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
5.பிபி மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சினையுள்ளோர் வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து தினமும் தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் மற்றும் இரத்த அழுத்தத்தை(blood pressure) குறைக்கும்.
6.. தேனில் மூளையின் ஒரு பகுதியான ஹிப்போகாம்பஸில் அழற்சியை எதிர்த்துப் போராட உதவும் பொருட்கள் இருக்கலாம் என்று ஒரு ஆய்வு கூறுவதால் மூளை வளர்ச்சிக்கு இதை உபயோகப்படுத்தலாம்


