தேன் மற்றும் திப்பிலி பவுடரை கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் நடக்கும் மேஜிக்

 
honey

ரத்தத்தில் அசுத்தம் சேர்ந்தால் முகப்பரு உண்டாகிறது .இந்த முகப்பருவால் பலர் வெளியே செல்லவே கூச்சப்படுவது உண்டு .அதை கிள்ளினால் தழும்பு உண்டாகும் .சிலருக்கு இதனால் திருமண நிகழ்வுகளால் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும்போது கூட தாழ்வு மனப்பான்மையில் நெளிவது உண்டு .இந்த முகப்பருவுக்கு சில எளிமையான தீர்வுகளை கூறுகிறோம்

pimple

 

1.நீங்கள் எக்காரணம் கொண்டும் முகப்பருவை கிள்ளவோ தொடவோ கூடாது. பருக்களைக் கிள்ளும் பட்சத்தில் மிகப் பெரிய வடுக்களை உண்டாக்கும்.

2.தினமும் மூன்று முறையாவது முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்வோர் வீட்டுக்கு திரும்பியவுடன் கண்டிப்பாக முகம் கழுவ வேண்டும்.

3.இரவு தூங்கச் செல்லும் முன்பு முகத்தில் ஏதேனும் க்ரீம் பூசி இருந்தால் முழுவதுமாக நீக்கி விட்டு கழுவிய பின்னரே தூங்கச் செல்ல வேண்டும்.

4.முகப்பருவிற்கு தேன் மற்றும் திப்பிலி பவுடரை கலந்து முகத்தில் தடவினால் பருக்கள் மறையும் வடுக்கள் நாளடைவில் நீங்கும்.

5.பன்னீர் ரோஸ் பவுடர் சிவப்பு சந்தன தூள் போன்றவற்றை பன்னீர் அல்லது தேனுடன் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பருக்கள் நீங்க பொலிவான முக அழகைப் பெறலாம்.

6.ரோஜாவில் தயாரான பன்னீருடன் லெமன் சாறு சேர்த்து முகத்தில் வாரம் மூன்று முறை தடவி வந்தால் இதை முகப்பரு பிரச்சினை தீரும்

7.

ரோஜா மொட்டுக்களை சுடுநீரில் ஊறவைத்து அந்த நீரை பருவுள்ள இடத்தில் பூசி வந்தால் பரு காணாமல் போகும்

8.கொழுந்து வேப்பிலையை அரைத்து பருவுள்ள இடத்தில் பூசி வர பருக்கள் மறையும்

9.

சோற்று கற்றாழையின் சோறை எடுத்து பருவுள்ள இடத்தில் பூசி வர குணமாகும்

10.குப்பை மேனி இலையை சாறை பருவுள்ள இடத்தில் பூசி வந்தால் பரு குணமாகும்

11.பூண்டு எடுத்து பருவுள்ள இடத்தில் பூசி வர பரு காணாமல் போகும்