இங்கிலிஷ் மருந்தில் குணமாகாத இடுப்பு வலியை இன்ஸ்டன்ட்டாக குணமாக்கும் வழிகள்

 
back pain

இடுப்பு வலி என்பது அடி வயிற்றுக்கு கீழாகவும் மேல் தொடைக்கு மேலாகவும் ஏற்படும் அசெளகரியம் ஆகும். இது சில நேரங்களில் இடுப்புக்கு கீழாகவும் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. எனவே இந்த இடுப்பு வலி விளையாட்டு ,எக்சசைஸ் போன்ற வற்றில் ஈடுபடும் ஆண்களுக்கும் ,கிச்சனில் பல மணி நேரம் நின்று கொண்டே சமைக்கும் பெண்களுக்கும் ஏற்படும் .எனவே இதை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும் .மேலும் இந்த இடுப்பு வலி ,கிட்னி கற்களோ அல்லது குடலிறக்கம் காரணமாக கூட ஏற்படலாம்

hip pain

உளுந்து கஞ்சி

இந்த இடுப்பு வலிக்கு உளுந்தை பொட்டு நீக்கி, கஞ்சி செய்து கொடுத்து வந்தால் இடுப்பு வலி படிப்படியாக குறையும்.

மேலும் தோல் நீக்காத உளுந்தம்பருப்புடன், தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து, களி போல கிண்டி அதனுடன் சுவைக்காக பனைவெல்லம், வாழைப்பழம் சேர்த்து சாப்பிட உடல் பலம் பெற்று, இடுப்பு வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்தே போகும்

1. கடுமையான இடுப்பு வலிக்கு உடனடியாக இடுப்பு வலிக்கு நிவாரணம் செய்வதென்றால் அது சுடுநீர் ஒத்தடம் கொடுப்பதுதான். ஆனால் அதையே தினந்தோறும் செய்து கொண்டிருப்பது நல்லதல்ல.

2. தீராத இடுப்பு வலிக்கு ஐஸ் கட்டி ஒத்தடம் தரலாம். அதுவும் நிரந்தர தீர்வு அல்ல.

3. கொடுமையான இடுப்பு வலிக்கு படியை வைத்து முதுக்கு பின்புறம், வலி இருக்கும் இடத்தில் வைத்துப் படுத்து, படியை உருட்டினால் பெரும்பாலான வலிகள் மறைந்து போகும்.

4. தூக்கத்தை தொலைக்கும் இடுப்பு உளுந்தங்கஞ்சி நல்ல மாமருந்து

5. நம்மை நரக வேதனையில் சிக்க வைக்கும் இடுப்பு வலிக்கு சுக்கு டீ  நல்ல மருந்து