குள்ளமாயிருப்போரை உயரமாக வளர செய்யும் வழிகள்

 
height

ஒருவர் உயரமாக வளரவோ இல்லை பருமனாகவோ மாற வேண்டுமென்றால்  வயதிற்கு ஏற்றவாறு தூங்க வேண்டும். சிறியவர்கள் 12 மணிநேரம் வரை தூங்கலாம். பெரியவர்கள் 8 மணிநேரம் வரை தூங்கலாம். இவ்வாறாக தூங்கினால் உயரமாக வளரலாம்.முகமும் பொலிவாக இருக்கும் 

sleep

ஒருவர் உயரமாக அவர்க்கு  உடலில் போதுமான அளவு கால்சியம் தேவை . எலும்புக்கு கால்சியம் இல்லையன்றால் வலிமை இருக்காது . வலிமை இல்லை என்றால் நமது உயரம் போதுமான அளவு இருக்காது. எனவே, கால்சியம் உள்ள உணவில் பால், முட்டை, மீன், காளான் மற்றும் பச்சை நிற காய்கறிகள் என சாப்பிடுவது நல்லது.

நமது உடல் கால்சியம் சத்துக்களை ஏற்றுக் கொள்ள விட்டமின் டி தேவைப்படுகிறது. எனவே, விட்டமின் டி-யை உணவு மூலமாகவே அல்லது சூரிய ஒளியின் மூலமோ பெறலாம். எனவே காலை நேரத்தில சூரிய ஒளிபடும் இடத்தில் நடந்தால் போதும் இயற்கையான விட்டமின் டி கிடைக்கும்.

காய் கறிகளில் பீன்ஸில் அதிக அளவு விட்டமின் மற்றும் புரோட்டீன் உள்ளது. இது ஒருவர்  உயரமாக வளர பயன்படுகிறது. எனவே, இதனை தொடர்ந்து சாப்பிட்டால் உயரமாக வளர அதிக வாய்ப்புகள் உள்ளன.


பழங்களில் திராட்சை, பப்பாளி, மாம்பழம் போன்றவற்றில் அதிக அளவு விட்டமின், பொட்டாசியம், போலேட் உள்ளது. இந்த சத்துக்கள் நாம் உயரமாக வளர மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் இவ்வகையான பழங்களை சாப்பிடுவது நல்லது.

பாலுடன் வெல்லம்  கலந்து குடித்தால் இரண்டு மடங்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே, காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு ஸ்பூன் வெல்லம் கலந்து குடிக்க வேண்டும்.

கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் ஹார்மோன் வளர்ச்சிக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும். ஒரு நாளைக்கு சரியான அளவு கேரட் மூன்று சாப்பிடலாம்

முழுதானியங்களில் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகமாகவே உள்ளது. இதனை சாப்பிட்டால் நமது உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்க பெரிதும் உதவுகிறது. குழந்தைகளுக்கு இதனை அதிகமாக கொடுத்தால் அவர்கள் உயரமாக வளர உதவும்.