நெஞ்செரிச்சலை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?
பொதுவாக அதிக உணவு உண்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது,சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடாமல் இருப்பது, இரவில் தாமதமாக உறங்குவது, கவலை, மன அழுத்தம் போன்றவைகளால் நமக்கு நெஞ்செரிச்சல் உண்டாகி நம்மை பாடாய் படுத்தி எடுக்கிறது .இந்த நெஞ்செரிச்சலை தவிர்க்கும் வழிகள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்
1.பொதுவாக சிலர் வயிறு முட்ட சாப்பிடுவர் .வயிற்றில் அதிக அளவு உணவு இருக்கும் போது அஜீரணப் பிரச்சனை நெஞ்சு எரிச்சலுக்கு முக்கிய காரணமாகிறது.
2.மேலும் சிலர் அதிக கார உணவு, துரித உணவு, கொறிக்கும் உணவு போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது; மற்றும் காலை உணவைத் தவிர்ப்பது,போன்ற காரணத்தாலும் நெஞ்செரிச்சல் உண்டாகிறது
3.சிலர் பசிக்கும் நேரத்தில் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடாமல், நொறுக்கு தீனிகளால் வயிற்றை நிரப்புவர் , இது போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தூண்டுகின்றன.
4.மேலும் சிலருக்கு இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தாலும், அது உணவுக் குழாயின் கீழ்ப் பகுதிக்குச் சென்று காயத்தை ஏற்படுத்தும். ‘
5.மேலும் சிலர் மிளகு, ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனை திரவியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை அடிக்கடி உண்ணுவர் .இதனால் ஜீரண மண்டலம் பாதிப்பு அடைந்து நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது.
6.மேலும் சிலர் அவசரம் அவசரமாக உணவை மென்று விழுங்கும் போது வயிற்றிற்கு வேலை அதிகமாவதால் அதுவும் நெஞ்சு எரிச்சலுக்கு காரணமாகிறது.
7.எனவே நெஞ்செரிச்சலை தவிர்க்க உணவை மெதுவாக மென்று விழுங்குவது மிகவும் நல்லது.
8.மேலும் சிகரெட்டில் உள்ள நிகோடின் தொண்டை, உணவுக்குழாய் போன்றவற்றை பலம் இழக்கச் செய்து, உணவு ஜீரணம் முழுமை அடையாமல் போவாதால் நெஞ்சு எரிச்சல் உண்டாகிநம்மை பாடாய் படுத்தும் .
9.எனவே நெஞ்செரிச்சலை தவிர்க்க புகைபழக்கத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.


