இளம் வயதிலேயே இதய நோய் வராமல் தடுக்கும் முறைகள்

 
heart

இன்று  இந்த தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற உணவுகளை சாப்பிடுவது  முற்றிலும் மாறிவிட்டது. இதன் காரணமாக இளம் வயதினருக்கு உடல் பருமன், இதய நோய், சர்க்கரை நோய் என எல்லா நோய்களும் வரிசை கட்டி வரத்துவங்கிவிட்டன. 

அதாஉ மட்டுமல்லாமல் உண்ணும் சாப்பாட்டுக்கு ஏற்ற  உழைப்பும் இல்லை. அதனால் அந்த உணவெல்லாம் உடலில்  கொழுப்பாக மாறி விடுகிறது .மேலும் அந்த உணவால் வந்த கொழுப்பு உடலில்  எங்கெல்லாம் இடமிருக்கிறதோ அங்கெல்லாம் படிந்துவிடுகிறது. குறிப்பாக மனித உடலின் ரத்தக்குழாயில் படிந்த கெட்ட கொழுப்புதான்  (எல்.டி.எல்) நமக்குஇளம் வயதிலேயே  இதய நோய் உண்டாக்கி நம்மை திண்டாட வைக்கிறது 

heart failure

அடுத்து, இன்றைய  இளைஞர்கள் எதையோ தேடி அதிவேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் ஓய்வு, உறக்கம் மறந்து வேலை செய்கிறார்கள். அதுவும் உலகமயமாக்கலுக்கு பிறகு பணிச்சூழலும் மாறிவிட்டதன் காரணமாக அவர்களின் உடல் மனம் இரண்டும் பாதிக்கிறது .
இதனால், மனஅழுத்தம் அதிகரிக்கிறது. இதுவும் இதய நோய்க்கு முக்கிய காரணம். இவை தவிர,  இன்று, பலரிடம் உடற்பயிற்சி என்பதே இல்லாமல் போய்விட்டதால் அவர்களுக்கு உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்தஅழுத்தம் ஆகியவை உண்டாகிறது . இதனால், குறைந்த வயதிலேயே மாரடைப்பு நோய் தாக்குதலுக்குள்ளாகி மிகவும் அவத்திப்படுகின்றனர் .இதற்கு ஒரே தீர்வு நம் முன்னோர்கள் காட்டிய உணவு பழக்கத்தை  மீண்டும் கடை பிடித்து ஆரோக்கியமாக வாழலாம் .