முன்னாடி முதியோருக்கு வந்த மாரடைப்பு இப்பல்லாம் முப்பது வயசுலே ஏன் வருது தெரியுமா ?

 
heart pain

இதயம்... நம் உயிர் காக்கும் உறுப்பு. சராசரியாக 300 கிராம் எடையுள்ள இதயம் நாளொன்றுக்கு லட்சம் முறைக்கு மேல் துடிக்கிறது. ஒரு வருடத்தில் 31 லட்சத்து 59 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பம்ப் செய்கிறது. நாம் உறங்கினாலும், விழித்திருந்தாலும், சும்மா இருந்தாலும், சுறுசுறுப்பாக வேலை செய்தாலும் இடைவிடாது துடிப்பது இதயம் மட்டுமே.

இவை பெரும்பாலும் இதயவால்வு கோளாறுகள் மற்றும் இதயத்தின் இடைச்சுவர்க் கோளாறுகளால் வருபவை. இவற்றுக்கு அறுவை சிகிச்சைதான் தீர்வு தரும். பிற்காலத்தில் வருகின்ற இதயத் துடிப்பு நோய், கரோனரி ரத்தக்குழாய் நோய் மற்றும் இதயச் செயலிழப்பு உள்ளிட்ட இதயத்தசை நோய்கள் பெரியவர்களைப் பாதிக்கின்றன. இதயத்துடிப்புக் கோளாறுக்கு மாத்திரை மற்றும் பேஸ்மேக்கர் கருவி உதவும். இதயச் செயலிழப்புக்கு மருத்துவ சிகிச்சை பலன் தரும்.

Heart Checkup

 பொதுவாக வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என நினைத்துக்கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. மிக இளம் வயதினர் கூட மாரைப்பால் இறந்து வருகின்றனர்

இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்தின் நாலங்களில் கொழுப்பு படிவது தான் முக்கிய காரணம். ஒரு சில கொழுப்பு உணவுகளை நாம் எடுத்து கொள்ளும் போதே இப்படி ஆகிவிடுகின்றது.

 

எனவே, மாரடைப்பு அபாயத்தை ஏற்படுத்தும் உணவை விட்டு விலகி இருந்தல் இயதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தற்போது அந்த உணவுகள் என்ன என்பதை பார்ப்போம்.

அதிக உப்பை உட்கொள்ளும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், இந்த பழக்கத்தை உடனே மாற்றுங்கள். ஏனென்றால் அதிக உப்பு உங்கள் இதயத்திற்கு நல்லதல்ல. அதிக உப்பு சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

அதிக சர்க்கரை சாப்பிடுவதும் இதயத்திற்கு நல்லதல்ல, ஏனெனில் அதிக சர்க்கரை சாப்பிடுவதால், சர்க்கரை நோய் வரும் அபாயமும் உள்ளது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

உங்கள் உணவில் முட்டையின் மஞ்சள் கருவை ஒருபோதும் சேர்க்க வேண்டாம், ஏனெனில் மஞ்சள் கருவில் சாச்சுரேடட் கொழுப்பு உள்ளது. எனவே, குறைந்த அளவே முட்டைகளை உட்கொள்ள வேண்டும்.

இதய நோயாளிகளுக்கு இது மிகவும் ஆபத்தானது. இதனை உட்கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.