உங்க கிட்னியை கூடிய விரைவில் சட்னியாக்கும் இந்த உணவுகள்

 
kidney

பொதுவாக சில வகை உணவுகள் நம் கிட்னிக்கு கேடாக வரும் .அது எந்த உணவுகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1.பன்றி இறைச்சி, ஹாட் டாக் மற்றும் பர்கர் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் உங்கள் சிறுநீரக த்திற்கு ஆபத்து விளைவிக்கும்

2.மேற்சொன்னவற்றில் அதிக சோடியம் உள்ளதால் கிட்னிக்கு ஆபத்து

3.மேலும் அதிகப்படியான சோடியம் தொடர்ந்து உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்

kidney

4.இதனால் உங்கள் சிறுநீரகங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி ஆரோக்கிய குறைபாடு உண்டாக்கும்  

5.சிலர் சோடா மற்றும் குளிர்பானம் அருந்துவர் .இந்த சோடாக்களில் சர்க்கரை உள்ளடக்கம் அதிகம் மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு கொஞ்சமும் இல்லை.

6.இந்த சோடா குளிர்பானம் உங்கள் உணவில் கூடுதல் கலோரிகளை சேர்க்கின்றன,

7.இதன் விளைவாக எடை அதிகரிக்கும். சோடாக்களை உட்கொள்வது எலும்புகள் பலவீனமாகவும் உடையக்கூடியதாகவும் மாறும் வாய்ப்பு அதிகம் 

8.மேலும் இந்த பானங்களால் சிறுநீரக நோய், வளர்சிதை மாற்ற நோய்க்குறி மற்றும் பல் பிரச்சனைகள் போன்ற ஏற்படுவதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது.

9.மேலும் குளிர் பதன பெட்டியில் வைத்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் டைப் 2 நீரிழிவு நோயின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம்.

10.எப்பொழுதும் புதிய மற்றும் முழு உணவுகளைத் தயாரித்து உண்ணுவது கிட்னி ஆரோக்கியத்துக்கு நலம் சேர்க்கும்