சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நாம் என்ன செய்ய வேணும்னு தெரிஞ்சிக்கோங்க

பொதுவாக நம் கிட்னியில் சேரும் உப்புகள் தான் எதிர்காலத்தில் கல்லாக உருவாகும் .அந்த கல் உருவாகி விட்டால் அது கிட்னியிலிருந்து வெளியேற முயற்சிக்கும்போது நம் இடுப்பிலிருந்து பிறப்புறுப்பு வரை தாங்க முடியாத வலி உருவாகும் .அதனால் கிட்னி கல்லை எவ்வாறு வராமல் தடுக்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம் .
1.சிறுநீரக கற்களைத் தடுக்க ஒருநாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
2.சிறுநீரகத்தில் கல் இருந்தால், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
3.. சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள், இந்த தர்பூசணி, திராட்சைபழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் மிகவும் நல்லது.
4.பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
5.வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
6.எண்ணெயில் பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
7.சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது.