தலைவலி வர சில தவறான பழக்கங்கள் .

 
head ache

பொதுவாக தலைவலி உண்டாக நாம் செய்யும் செயலே காரணம் .இந்த தலைவலிக்கு அடிக்கடி சிலர் மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டு அதனால் உண்டாகும் பக்க விளைவால் அவதிப்படுகின்றனர் .அதனால் நாம் செய்யும் சில செயலில் சில மாற்றத்தை கொண்டு வந்தால் இந்த தலை வலி வராது .அதாவது சிலருக்கு தூக்கம் குறைவாக இருந்தால் தலை வலி வரும் .அவர்கள் இரவில் நன்றாக தூங்க முயற்சி செய்ய வேண்டும் .சிலருக்கு குளிர்ச்சியான பொருட்களை சாப்பிட்டால் போதும் உடனே தலை வலி வந்துவிடும் .இதற்கு குளிர்ச்சி பொருளால் மூளை உறைந்து போவது காரணம் .மேலும் இந்த தலை வலிக்கு பின் வரும் செயலும் ஒரு காரணம் .அது பற்றி பார்க்கலாம்  

1.சிலர் தலைக்கு குளித்ததும், சரியாக காய வைக்காமல் இருப்பர்  இதனால் தலையில் நீரானது அப்படியே தங்கி,தலைவலி உண்டாகும் .

bath

2. வெயிலில் செல்லும்போது அளவுக்கு அதிகமான வெப்பம் ஸ்கால்ப்பில் படும் போது, தலைவலியானது உண்டாகும்.

3. சரியாக உண்ணாமல் வெயிலில் சென்றாலும், சூரியக் கதிர்கள் உடலில் உள்ள எனர்ஜியை ஈர்த்து, பெரும் வலியை உண்டாக்கும்.

4.சிலர் அளவுக்கு அதிகமாக வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொண்டு செல்வதால் அந்த செண்ட் வாசனை, அதிக தலை வலியை உண்டாக்கும்

5.தொடர்ச்சியாக டிவியை பார்க்கும் போதும்  தலை வலியுண்டாகும்