முடி கொட்டாமலிருக்க ,நாங்க சொல்றதை தட்டாம செய்யுங்க

 
hair

பொதுவாக ஒருவருக்கு அழகை கூட்டுவதற்கு தலை முடியும் முக்கியம் என்பதில் சந்தேகமில்லை .அதனால்தான் பெண்கள் கூந்தல் பராமரிப்புக்கும் ,ஆண்கள் தலை முடி வளர்ச்சிக்கும் நிறைய செலவு செய்கின்றனர் .அதிலும் சில ஆண்கள் வழுக்கை விழுந்து விட்டால் அதை மறைக்க தொப்பி போடுவார் ,இன்னும் சிலர் விக் வைத்து கொள்வார் .இன்னும் வசதி படைத்தவர் ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் டிரீட்மென்ட் செய்து கொள்வார் .இருந்தாலும் சில இயற்கை குறிப்புகளை பயன்படுத்தி முடி கொட்டிய இடத்தில் எப்படி முடி வளர வைக்கலாம் என்று பார்ப்போம்

Shiny Hair

 

1.முடி கொட்டிய இடத்தில் முடி வளர வெங்காயம் பயன்படும் .ஆம் வெங்காயத்தில் அதிக அளவு சல்பர் நிறைந்துள்ளதால் வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து தலை முடி உதிர்ந்த இடத்தில் தடவ வேண்டும்.

இதுபோன்று வாரத்திற்கு குறைந்தது 3 அல்லது 4 முறை செய்து வந்தால் முடி உதிர்ந்த சொட்டையான இடத்தில் மீண்டும்  முடி வளர்ந்து அழகாக இருப்பீர்கள்

2.முடி கொட்டிய இடத்தில் முடி வளர கொத்தமல்லி பயன்படும் .கொத்தமல்லி முடி உதிர்வு பிரச்சினையை முழுமையாக தடுக்கிறது.முன் கொட்டிய இடத்தில்  முடி வளர கொத்தமல்லியை அரைத்து தலையில்  தடவி 10 நிமிடம் கழித்து  நீரில் தலையை அலசினால் சில நாட்களில் மீண்டும் முடி வளரும்

3. முடி கொட்டிய இடத்தில் முடி வளர ஆலிவ் ஆயில் பயன்படும் .முடி வளர ஆலிவ் ஆயிலுடன் சிறிது இலவங்கப் பட்டை பொடி மற்றும் ஒரு டீஸ்பூன் தேனை ஒன்றாக கலந்து முடி உதிர்ந்த இடத்தில் இந்த கலவையை நன்கு தடவி அலசி வந்தால் மீண்டும் திட்டான இடத்தில் முடி வளரும்

4. முடி கொட்டிய இடத்தில் முடி வளர   சிறிது அளவு வேப்பிலை எடுத்து அவற்றை நன்கு கொதிக்க வைத்து அந்த நீரில் தலையை அலசி வந்தால் சொட்டையில் மீண்டும் முடி வளர்ந்து ஹாப்பியாக இருப்பீர்கள் .