இயற்கை முறையில் தலைமுடியை எப்படி கிடுகிடுவென வளர வைக்க முடியும்.

 
hair fall prevent tips hair fall prevent tips

பொதுவாக முடி உதிர்வு பிரச்சினை இக்காலத்தில் பரவலாக காணப்படுகின்றது .இதற்கு மன அழுத்தம் ஒரு காரணமாக கூறப்பட்டாலும் ,நாம் உண்ணும் உணவில் சத்தில்லாமையையும் ஒரு காரணம் அதனால் இந்த முடி உதிர்வை கட்டுப்படுத்தி எப்படி முடி வளர செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 
இயற்கை முறையில் தலைமுடியை எப்படி கிடுகிடுவென வளர வைக்க முடியும் என்று பார்ப்போம் -

1.சிலருக்கு தலைமுடி கொட்டும் .அவர்களுக்கு முடி கிடுகிடுவென வளர வேண்டும் என்றால், கொதிக்கும் நீரில் ஒரு கைப்பிடி வேப்பிலையை போட்டு நன்றாக கொதிக்க விட்டு இறக்கிவிடவேண்டும்.
2. அந்த வேப்பிலை நீரை மறுநாள் காலை தலையில் தேய்த்து கழுவி வந்தால் முடி வளர்ச்சி பெறும்.
3.அடுத்து கடுக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி விட்டு ஆற வைக்கவும் , 
4.அந்த கடுக்காய் ,நெல்லி நீரை  மறுநாள் காலையில் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.
5.அடுத்து முடி வளர கீழநெல்லி கீரையை சுத்தம் செய்து அதை தேய்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி  வைக்கவும் 
6.இந்த கீழாநெல்லி நீரை தலைக்கு தடவி வந்தால் முடி செழித்து வளரும்.
7.அடுத்து முடி கொட்டுவோர் உணவில் நெல்லிக்காய்யை சேர்த்து சாப்பிட்டு வந்தால் முடி உதிர்தல் குறையும்.
8.அடுத்து முடி கொட்டுவோர் ஆலமரத்தின் வேர், செம்பருத்தி பூ இடித்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் முடி உதிர்தல் பிரச்சினை சரியாகும்.
9.அடுத்து முடி கொட்டுவோர் மற்றும் நரை முடியுள்ளோர் நெல்லிக்காயை பவுடரை, தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருமையடையும்.
10.அடுத்து முடி கொட்டுவோர் கறிவேப்பிலை, சின்ன வெங்காயத்தை அரைத்து தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி வளர்ச்சி பெறும்.
11.அடுத்து முடி கொட்டுவோர் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தலையில் போட்டு குளித்து வந்தால் தலைமுடி செழித்து வளரும்.