கண்ட ஷாம்பூ போட்டும் முடிகொட்டிகிட்டேயிருக்கா ?கொட்டாமலிருக்க இதை தட்டாமல் செய்யுங்க

 
hair fall

தலைமுடி உதிரும் பிரச்சினை இன்று பலருக்கும் இருக்கும் மிகப் பெரிய கவலையாக இருந்து வருகிறது. எவ்வளவோ முயற்சிகள் செய்தும் நல்ல பலன் கிடைக்காமல் சங்கடப்பட்டு வருகிறோம். இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் எண்ணெய் வகைகள் ஏராளம் விற்பனைக்கு உள்ளன. அவற்றையெல்லாம் மாதக் கணக்கில் பயன்படுத்தினாலும் கூட நமக்கு சரியான தீர்வு மட்டும் கிடைப்பதில்லை. தலைமுடி உதிர்தல் பிரச்சனைக்கு முக்கிய காரணம் சரியான சத்துள்ள உணவை நாம் எடுத்துக் கொள்ளாதது தான். சரிவிகித உணவு எடுத்துக் கொண்டால் தலை முடி உதிர்வது நிற்கும். ஆனால் இன்றைய சூழலில் சரிவிகித உணவு எடுத்துக் கொள்வதற்கு யாருக்கும் நேரமில்லாமல் போய்விட்டது. இதனால் எண்ணெய் விற்பனை மட்டும் படு ஜோராக நடந்து வருகிறது. எந்த எண்ணையை நாம் வாங்கி தடவினாலும், முடி உதிர்வது அதிகமாகிறதே தவிர குறைந்த பாடில்லை என்கிற புலம்பல் தான் நம்மிடம் இருக்கிறது.

men-hair

கூந்தலில் ஒரு முடி கூட உதிராமல் இருக்க இந்த ஆரஞ்சு பழத்தோல் ஹேர் பேக் எப்படி போடுவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு சிலருக்கு முடி உதிர்ந்து கொண்டே இருக்கும். என்ன எண்ணெய், என்ன மசாஜ், என்ன பேக் போட்டாலும் முடி உதிர்வது நிற்காது. இது போன்று இருந்தால் இந்த ஆரஞ்சு ஹேர் பேக் போட்டு பாருங்கள். உங்களுக்கு முடி உதிர்வது முழுமையாக நிற்க தொடங்கும். இதனை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள். முதலில் உங்கள் கூந்தல் அளவை பொறுத்து 2, 3 ஆரஞ்சு பழத்தோல்களை எடுத்து கொள்ளுங்கள். இதனை நன்கு கொதிக்கும் சுடுதண்ணீரில் போடுங்கள். பழத்தோல்களும் நன்கு வேகும்வரை அடுப்பை ஆன் செய்து வையுங்கள்.

10 நிமிடம் கழித்து, தோல்களை மிக்சி ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள். 4 மணி நேரத்திற்கு முன்பு வெந்தயத்தை ஊற வைத்து கொள்ளுங்கள். இதனை மிக்சியில் சேர்த்து கொள்ளுங்கள். வெந்தயம் ஊறிய தண்ணீரையும் சேர்த்து கொண்டு நன்கு விழுதாக அரைத்து கொள்ளுங்கள். இதனை ஒரு காட்டன் துணியில் வைத்து தண்ணீரை வடிகட்டி கொள்ளுங்கள். இந்த தண்ணீரை உங்கள் தலையில் நன்றாக மசாஜ் செய்யுங்கள். வேர்க்கால்களில் நன்கு படும்படி மசாஜ் செய்து விடுங்கள். தலையில் உச்சி முதல் நுனி வரை இந்த பேக்கை போட்டு 20 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஷாம்பு போட்டு குளித்து விடுங்கள். உங்களுக்கே நல்ல வித்தியாசம் தெரியும். அந்த அளவு இதன் பளபளப்பு மற்றும் சிக்கு குறைவாக இருக்கும். பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். முடியின் உதிர்வும் குறைவாக இருக்கும். இந்த ஆரஞ்சு பேக்கை வாரத்திற்கு 1 முறை பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து 5 மாதம் பயன்படுத்த வேண்டும். அவ்வளவு தான் உங்கள் முடி உதிர்வு நன்கு குறைந்து விடும். மேலும், 5 வாரத்திற்கு பிறகு 6 மாதங்கள் கழித்து மீண்டும் 5 வாரங்கள் என இந்த பேக்கை பயன்படுத்துங்கள். முக்கியமாக வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே இந்த பேக்கை பயன்படுத்த வேண்டும்.