பச்சை தக்காளிக்குள் பதுங்கியுள்ள ஆரோக்கிய ரகசியம்

 
green tomato

பொதுவாக தக்காளி நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்க கூடியது .இந்த தக்காளியை எப்படி சாப்பிட்டால் என்ன நன்மை உண்டாகும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

tomato

1.தக்காளிப் பழச்சாற்றிலுள்ள வலி நிவாரணத் தன்மை உடல் வலியையும் குறைக்கிறது.

2. தக்காளிச்சாற்றை தொடர்ந்து குடித்துவர கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பாதையில் தோன்றும் கிருமித்தொற்று மற்றும் நச்சுக்கிருமிகள் நீங்கும்.

3.தக்காளி சாற்றுடன் கற்கண்டு அல்லது சீனி கலந்து சாப்பிடுவதாள் உடல் சூடு குறையும் 

4.நன்கு பழுத்த தக்காளிப்பழத்துடன் சர்க்கரை  கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பதாலும் உடல் உஷ்ணம் தணியும்.

5.தக்காளியை சூடு செய்யாமல் வடிகட்டி அப்படியே சாப்பிடுவதால் சிறுநீர் கிருமித்தொற்று நீங்குகிறது. 6.ஆனால் தக்காளியை தோல் மற்றும் விதையுடன் சேர்த்து உட்கொள்வதால் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உண்டாகிவிடுகின்றன.

7.மேலும் பச்சை தக்காளிச்சாறு உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது. உடல் சூட்டை குறைக்கும்

8.சர்க்கரை நோயாளிகளுக்கு தொடர்ந்து வெப்பத்தாக்குதலை நீக்க தக்காளியை அடிக்கடி உட்கொள்ளலாம். 9.தக்காளியை தொடர்ந்து உட்கொள்வதால் உணவுப்பாதை, சிறுநீர்ப்பாதை மற்றும் புராஸ்டேட் கிளான்டில் ஏற்படும் புற்றுநோய் தடுக்கப்படுகின்றன .

10.கோடைகாலத்தில் முகத்தில் ஏற்படும் முகச்சுருக்கங்கள் மறைய தக்காளிச்சாற்றை முகத்தில் பூசி வரலாம்