இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிடும் பொழுது எந்த நோய் விலகும் தெரியுமா ?
தேன் நம்முடைய உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருகிறது. தேன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. என்னென்ன பொருட்களுடன் தேன் கலந்து குடித்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
பாலில் தேன் கலந்து இரவில் நீங்கள் அதை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல தூக்கம் கிடைக்கும். தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பாலில் தேன் கலந்து குடித்துப் பாருங்கள் நல்ல மாற்றம் தெரியும்.
பாலில் தேன் கலந்து இரவில் குடித்து வரும் பொழுது இதய ஆரோக்கியம் அதிகரிக்கும்.
பழச்சாறுகளுடன் தேன் கலந்து குடிக்கும் பொழுது உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கும்.
மாதுளம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்கும் பொழுது அது புதிய ரத்தம் வருவதை அதிகரிக்கும்.
எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்கும் பொழுது அது இருமலை குணமாக்கும். தொடர் இருமல் பிரச்சனை இருப்பவர்கள் இதை முயற்சி செய்து பாருங்கள்.
நெல்லிக்காய் சாற்றுடன் தேன் கலந்து குடிக்கும் பொழுது அது உடலில் இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கும்.
ஆரஞ்சு பழத்துடன் தேன் கலந்து குடிக்கும் பொழுது அது நல்ல தூக்கத்தை கொடுக்கும்.
ரோஜாப்பூ குல்கந்துடன் தேன் கலந்து சாப்பிடும் பொழுது அது உடலில் உள்ள சூட்டை தணிக்கும். உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் இதை முயற்சி செய்யலாம்.
தேங்காய் பாலில் தேன் கலந்து குடிக்கும் பொழுது அது குடல் புண் மற்றும் வாய்ப்புண்களை குணமாக்கும். குடல்புண் மற்றும் வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்கள் இதை முயற்சி செய்து பாருங்கள்.
இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிடும் பொழுது அது பித்தத்தை குறைக்கும்.
கேரட் உடன் தேன் கலந்து சாப்பிடும் பொழுது அது ரத்த சோகையை குணமாக்கும். இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் இதை முயற்சி செய்து பார்க்கலாம்.

