இஞ்சி டீயில் வெல்லம் சேர்த்து குடிச்சா இவ்ளோ நன்மையா ?

 
tea

பொதுவாக இஞ்சி நமது உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது அதில் நம் உடலுக்கு தேவையான பல சத்துக்களும் மருத்துவ குணமும் அடங்கியுள்ளது .இஞ்சி நம் உடலில் உள்ள பித்தம் ,கபம் ,வாயு போன்றவைகளை சம நிலையில் வைக்க உதவுகிறது .இதன் மூலம் நம் கல்லீரல் செயல்பாடு சிறப்பாக இருக்கும் .இந்த இஞ்சியை நாம் தேநீரில் கலந்து, வெல்லம் சேர்த்து குடிக்க நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது .அந்த ஆரோக்கிய பலன் களை பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம் .அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

Ginger

1.பொதுவாக தேநீரில் சர்க்கரையை விட வெல்லம் சேர்ப்பது ஆரோக்கியமானது. தீங்கு செய்யாது.

2.எனவே இதை  தேநீர் அல்லது மோர் அல்லது நீங்கள் குடிக்கும் வேறு எந்த பானத்திலும் சேர்க்கவும்.

3. தினம் காலையில் இஞ்சி டீயுடன் வெல்லம் சேர்த்து குடிப்பதால் பல உடல்நல பிரச்சனைகளை குறைத்து ஆரோக்கியமாக வாழலாம் .

4.இந்த வெல்லம் சேர்த்த இஞ்சி டீ ,நம் உடலில் சேரும் தேவையில்லா நச்சுகளை வெளியேற்றும்

5.இந்த நச்சுக்கள்  நீண்ட நேரம் உடலில் இருந்தால் பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே இவற்றை உடலில் இருந்து வெளியேற்ற இந்த தேனீர் பயன்படும்  .

6.மேலும் காலையில் ஒரு கப் வெல்லம் கலந்த டீ குடிப்பதால் ரத்தத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறிநம் உடல் புத்துணர்வு பெரும் .

7. இதன் மூலம்  கல்லீரலை  சுத்தப்படுத்தி, தேவையற்ற நோய்களில் இருந்து நம் உடலை பாதுகாக்க முடியும்.

8.இந்த வெல்லம் டீயை தொடர்ந்து அருந்தி வந்தால், உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும் என்று இதை குடித்தவர்கள் கூறுகின்றனர்

9.இந்த வெல்லம் கலந்த தேநீர் அசிடிட்டி, செரிமான கோளாறு, மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகளை நீக்குகிறது.

10.மேலும் இந்த வெல்லம் கலந்த இஞ்சி தேநீர், நமது குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.