இஞ்சியை கொதிக்க வச்சி குடிச்சா ,எந்த நோயை போட்டு மிதிக்கலாம் தெரியுமா ?

 
ginger

பொதுவாக நம் உடலுக்கு ஆரோக்கியம் தர நம் முன்னோர்கள் சில பொருட்களை நமக்கு அறிமுக படுத்தி விட்டு சென்றுள்ளனர் .அதில் முக்கியமானது இஞ்சி மற்றும் பூண்டு ,மிளகு போன்றவையாகும் .இம்மூன்றில் இஞ்சி மிக முக்கியமான பொருள் .அது நமக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்க கூடியது .இந்த பதிவில் இஞ்சி மூலம் நாம் அடையும் பலன்கள் பற்றி பார்க்கலாம்

1.சிலருக்கு கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கும் .கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக காணப்பட்டால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

Ginger

2.இந்த கொலஸ்ட்ரால் அதிகரிப்பு இது சில நேரங்களில் உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்.

3.இதை கட்டுக்குள் வைக்க  இஞ்சி தண்ணீர் உதவும் . இது நம் உடலில் உள்ள மொத்த கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்கிறது.

4.இஞ்சி தண்ணீர் குடிப்பதன்  மூலம், இதய நோய் மற்றும் கொலஸ்ட்ரால் தொடர்பான பிற நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.இனி இஞ்சி தண்ணீர் செய்வது எப்படி? என்று பார்க்கலாம்

5.முதலில் 1-2 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து விடவும்  .அதில் பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்க்கவும்.

 6.இந்த இஞ்சியை குறைந்தது 20 நிமிடங்களாவது கொதிக்க விடவும்,

7. அதன் பின்னர் அடுப்பை அனைத்து விட்டு ,இந்த நீரை வடிகட்டி குடிக்கவும்.

8.அந்த இஞ்சி கஷாயத்தில் தேன் மற்றும்  எலுமிச்சை சாறு போன்றவற்றை கூடுதலாக சேர்க்கலாம்.

9.இதில் கவனிக்க வேண்டியது ,அதிகளவு இஞ்சியை உட்கொள்வது வயிற்று வலி, வாயு மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

10.மேலும் சிலருக்கு பித்தப்பைக் கற்கள் இருக்கும் .இப்படி  உள்ளவர்கள் இஞ்சியைத் தவிர்க்க வேண்டும்