இஞ்சியும் பூண்டும் அடிக்கடி சேர்த்தால் எந்த நோய்க்காக ஆஸ்ப்பிட்டலில் சேரவேணாம் தெரியுமா ?

 
garlic

ஒருவருக்கு வாயு தொல்லை இருப்பதற்கான அறிகுறிகளாக அஜீரணம் , வயிறு உப்பிசம் ,நெஞ்செரிச்சல் போன்றவை வெளிப்படும் .இந்த வாயு தொல்லை எப்படி ஏற்படுகிறது என்றால் நாம் சாப்பிடும்போது காற்றையும் சேர்த்து விழுங்குகிறோம் .இது 80 சதவீதம் ஏப்பமாக வெளியேறும் ,மீதி 20 சதவீதம் ஆசன வாய் வழியாக வெளியேறிவிடும் .இந்த வாயு தொல்லை நம்மை படுத்தி எடுக்காமலிருக்க சில இயற்கை வைத்ய முறைகள் உள்ளன .இந்த பதிவில் அவற்றை பற்றி பார்க்கலாம் 

ginger

வாயு தொல்லை நீங்க உணவுகள்

1.இஞ்சி

வாயு தொல்லை உள்ளவர்கள் இஞ்சி சாற்றை காலையில் தேனீருடன் கலந்து குடிக்கலாம். அல்லது இந்த தொல்லை நீங்க இஞ்சி சாற்றை எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீருடன் கலந்து குடிக்கலாம்.

2.பூண்டு

 

வாயு தொல்லை உள்ளவர்கள் பூண்டை உபயோகிக்கலாம் .பூண்டில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. உணவில் அதிகம் பூண்டினை சேர்த்துக் கொள்வோருக்கு வாயு பிரச்சனைக்கு சிறந்த தீர்வு கிடைக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது

3.திரிபலா பொடி

வாயு தொல்லை உள்ளவர்கள் மருந்து கடைகளில் கிடைக்கும் திரிபலா பொடியை கொதிநீரில் ஊற வைத்து ஆறிய பின்னர் இரவு உறங்க செல்ல முன் தினமும் குடித்து வந்தால் வாயு தொல்லையில் இருந்து நிரந்த தீர்வை பெறலாம் என்று சித்தர்களின் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது