பூண்டு பற்களை வெந்நீரில் கொதிக்க வைத்து குடிக்க எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
garlic

சிலருக்கு சில வகை உணவுகளை சாப்பிடும்போது திடீரென்று அலர்ஜியாகி உடல் முழுவதும் தடிமனாகி விடும் ,இன்னும் சிலருக்கு சிவப்பு சிவப்பாக ரேஷஸ் தோன்றி உடல் முழுவதும் அரிப்பு தோன்றும் .இன்னும் சிலருக்கோ உதடுகள் மற்றும் முகம் வீங்கி விடும் .இந்த அலர்ஜி பிரச்சினைக்கு வீட்டிலேயே சில வைத்தியம் உள்ளது .அதன் படி வெற்றிலை மற்றும் மிளகை கஷாயம் வைத்து குடித்தால் இந்த அலர்ஜியிலிருந்து வெளியே வரலாம் .மேலும் இது ரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்களை வெளியேற்றி இந்த அலர்ஜியை குணப்படுத்தும் ,மேலும் சில மருத்துவ குறிப்புகளை பார்க்கலாம்

உணவு ஒவ்வாமை அறிகுறிகள் மற்றும் வீட்டிலேயே சரி செய்யும் வழிமுறைகள்

வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எளிதில் சரிசெய்யலாம்

1.வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு இஞ்சி சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். இதனால் நோய்க் கிருமிகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி உடலுக்கு கிடைக்கும் மற்றும் அந்த அலர்ஜி வலி குறையும்.

ginger

2.அலர்ஜியால் அவஸ்த்தை படுவோர் சிறிதளவு துளசி இலையை சாறாக்கி தேன் கலந்து குடிக்கலாம், இதனால் வயிறு, தொண்டையில் ஏற்படும் நோய்த்தொற்று மற்றும் வலி இல்லாமல் போகும் 

3.இந்த அலர்ஜி பிரச்சினைக்கு தண்ணீர் அதிகமாக பருகலாம் 

4.அலர்ஜி பூர்ண குணமாக பூண்டு பற்களை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.குணமடைந்த பின் சிறிது சிறிதாக உணவினை அதிகரிக்க வேண்டும்.